Header Ads



மத அடிப்படைவாதத்தின் ஊடாக, மோதல்களை வெடிக்கச் செய்ய முயற்சி


நாட்டில் மதவாதத்தை தூண்டி அதன் மூலம் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பயன்படுத்தி வன்முறைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று இலங்கையில் மத அடிப்படைவாதத்தின் ஊடாக, மோதல்களை வெடிக்கச் செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.அண்மையில் பதுளை பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுடன் இடம்பெற்ற முரண்பாடுகளானது, மறைமுக நோக்கங்களைக் கொண்டவர்களின் முயற்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சூழ்ச்சித் திட்டங்களுக்கு அடிபணிந்து விடாது, அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். gtn

No comments

Powered by Blogger.