Header Ads



ரணில் விக்கிரமசிங்காவை பாராட்ட வேண்டும் - முபாரக் மௌலவி


இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சமயப்பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விரிவாக பேசியமைக்காக ஐ தே க தலைவரை உலமா கட்சி பாராட்டியிருப்பதோடு, இதற்காக அவரை முஸ்லிம் இயக்கங்கள் வெளிப்படையாக பாராட்ட வேண்டும் என கோரியிருப்பதுடன், அவருக்கான  அரசாங்கத்தின் பிழையான பதிலை தாமும் இணைந்து தயாரித்ததாக கூறும் ஹக்கீமையும் கண்டித்துள்ளது. இது சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசா மந்தைகளாக இருக்கும் போது ஐ தே க தலைவர் துணிச்சலுடன் இது பற்றி பேசியமை பாராட்டுக்குரியதாகும். பெரும்பான்மை சமூகத்தின் விமர்சனத்துக்குள்ளாகலாம் என்றிருந்தும் அவர் எம் சமூக உரிமைகளை பேசியமைக்காக நாம் முஸ்லிம்கள் சார்பில் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே வேளை தமக்கு நல்லது செய்பவரை மனந்திறந்து பாராட்டும் பழக்கம் முஸ்லிம் சமூகத்திடமும் அதன் இஸ்லாமிய இயக்கங்களிடமும் இல்லாமையும், பதவிக்கும், அமைச்சர்களுக்கும் வால் பிடிக்கும் மோசமான போக்கும் மிகவும் கவலையளிக்கிறது.  ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கு இதுவரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூட நன்றி தெரிவிக்காமல் யாரையோ திருப்திப்படுத்த முணைந்துள்ளமை இஸ்லாத்துக்கு முரண்பட்ட செயலாகும். தவறு செய்பவர்களை விமர்சிக்கும் எமது உலமா கட்சி நல்லது செய்பவர்களை பாராட்டுவதில் எப்போதுமே சிறந்த வழிகாட்டலை செய்து வந்துள்ளது. இந்த அடிப்படையில் நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், பள்ளிவாசல் சம்மேளனங்கள் ரணிலை பகிரங்கமாக பாராட்டி அறிக்கை விட வேண்டும். இல்லாவிடில் எதிர் காலத்தில் எமக்காக பேசுவதற்கு எந்தவொரு சிங்கள உறுப்பினரும் முன்வர மாட்டார் என்பதை எச்சரிக்கிறோம். 

மேலும் எந்தவொரு முஸ்லிம் மதஸ்தலமும் இதுவரை தாக்கப்படவில்லை என்ற அரசாங்கத்தின் பதில் தமது ஒப்புதல் மூலமே தயாரிக்கப்பட்டது என மு. கா தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளமை கண்டிப்புக்குரியது மட்டுமன்றி மிகப்பெரிய காட்டிக்கொடுப்புமாகும். அனுராதபுரம், தம்புள்ள, தெஹிவல, குருனாகல் போன்ற இடங்களில் தாக்கப்பட்டவை முஸ்லிம்களின் மதஸ்தலம் இல்லாமல் முஸ்லிம் கேளிக்கை ஸ்தலம் என்றா இந்த முஸ்லிம் தலைவர்கள்  நினைத்துக்கொண்டார்கள் என கேட்கின்றோம். சில விடயங்களில் மட்டுமே தமது கருத்து உள்வாங்கப்பட்டதாக பின்னர் அறிக்கை விட்டு சமாளிக்க முனைந்த ஹக்கீம் எந்தப்பள்ளிவாயலும் தாக்கப்படவில்லை என பாராளுமன்றத்தில் அரச கூறப்பட்ட போது மௌனமாக இருந்தது நிச்சயமாக காட்டிக்கொடுப்பாகும். 

1980களில் முஸ்லிம் சமூகம் சில பிரச்சினைகளை எதிர் நோக்கிய போது அன்றிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது தொகுதிகளுக்கு சிறந்த சேவைகளை செய்திருந்தும் அவர்களுக்கெதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட கிழக்கு முஸ்லிம்கள் இன்று அதை விட மிக மிக மோசமான நிலையை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் போது  அமைச்சர்களின் காட்டிக்கொடுப்புக்களையும், மௌனத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களும் சுயநல அரசியலைத்தான் விரும்பகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. சுய நல அரசியல்வாதிகளின் இத்தகைய நிலைக்கு அவர்கள் பின்னால் திரியும் முஸ்லிம் சமூகமும்  பொறுப்புக்கூற வேண்டும். 

4 comments:

  1. மொளலவி ....

    இவனுகள் பள்ளிக்கு போனாத்தானே
    இது பள்ளியா? அல்லது வேறா? என்று தெரியும்.

    சம்பவம் அறிக்கை / நடவடிக்கை

    ஹக்கீம்:
    முஸ்லிம்களின் பிரச்சினை - மொளனமே சம்மதம்,பல்டி அடிப்பு
    சப்பை கட்டு.

    ஹிஸ்புல்லாஹ்:
    தம்புள்ளை பள்ளி உடைப்பு - அங்கு ஒன்றும் உடைக்கப்படவில்லை.
    (சிறுவன் மாதிரி பேசுவார்).

    அதாவுல்லாஹ்:
    கிறீஸ் மனிதன் - அது ஒரு செய்த்தான் குறை.

    நாம செய்த்தானுக்கு என்ன குறை வைத்தோம் சார் ?
    (சாருக்கு முஸ்லிம்களின் பிரச்சினை எண்டா கொஞ்சம் அலர்ஜி அதனால
    அதைப்பற்றி சிந்திக்கவே மாட்டார்)


    பசீர் சேகு தாவூத்:
    அமைச்சர் பதவிக்கு - ஆன்மீக(ஆ--மை)பலத்தை அதிகரிப்பார்.

    றிசாத்:
    பொதுவாக சண்டித்தனம் காட்டுவார், அதையும் நீதிமன்றத்துல மற்றும் ரணிலுகிட்ட காட்டினார்.

    ஹசன் அலி:
    முஸ்லிம்களின் பிரச்சினையை தவிர மற்ற எல்லாவற்றிற்கும் விசாரணை செய்வார், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார்.ஹக்கீமின் பாட்டுகளுக்கு நல்ல இசைஅமைப்பு.

    மற்றவர்கள்: - துணை நடிப்பு , பார்வையாளர்கள்
    அதிலும் ஹரீஸ் பேஸ் பேஸ்.

    ReplyDelete
  2. முக்கியமான விடயத்தை சுட்டி காட்டியுள்ளீர்கள்.. தயவு செய்து தனிப்பட்ட முறையிலாவது ரணிலுக்கு நன்றி கூருவது முஸ்லிம்களின் நன்றி மறவா பண்பை எதுத்துக்காட்டும்..

    AHAMAD... உங்களது பதிவு மிகவும் நன்றாகவும் பொருத்தமாகவும் உள்ளது.. எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. நன்றி குருவி.

    குருவி ஒன்று தெரியுமா ?

    எருமைக்கு மழை பெய்வது தெரியாதாம்; நம்மாளுகளுக்கு மின்னலடிப்பதே தெரியாதாம்; ஏன் ?

    சூடு சொரனை ஒன்றும் கிடையாதே!

    ReplyDelete
  4. ரணிலைப் பாராட்டாமல் இருக்க முடியாது ஏனெனில் சிங்கள மக்களின் வாக்கு வங்கி குறையும் என்ற பயத்தில் பாராளுமன்றத்தில் அவர் பொன்னயர்கள் மாதிரி பேசாமல் இருக்கவில்லை. மாறாக எங்கட வாக்குகளை எடுத்துவிட்டு ஆதரவாப் பேசாட்டியும் பரவால்ல பேசுரவனையும் விடுங்கப்பா.........

    ReplyDelete

Powered by Blogger.