நட்டஈட்டு பெவதற்காக தனது சொந்த கடைக்கு தீ வைத்த இலங்கையருக்கு சிறை
அயர்லாந்தில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நட்டஈட்டை பெற்றுக்கொள்வதற்காக இவர் தமது சொந்த விருந்தகத்திற்கு தீ வைத்துள்ளார்.
46 வயதான இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அயர்லாந்தின் டன்கார்வன் வர்த்தக நிலையத்தில் உள்ள அவரது சொந்த விருந்தகத்திற்கு தீ வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், நேற்று இது தொடர்ப்பான விசாரணை இடம்பெற்றது.
இந்த செயலானது கடுமையான தண்டனைக்குறிய குற்றம் என்று தெரிவித்த நீதிபதி, குறித்த இலங்கையருக்கு 3 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். sfm
Post a Comment