Header Ads



உயிருக்கும் உடைமைக்கும் மட்டுமா மஹ்ரமி ?


(மூத்த ஊடகவியலாளர் ஜே.எம்.ஹபீஸ்)

'பாதுகாப்பு' என்ற ஒரு சொல்லைத் தமிழ் மொழியில் தேடினால் பந்தோபஸ்த்து என்ற ஒரு சொல்லையும் தேடிப்பிடிக்க இயலும். ஆனால் ஆங்கலத்தில் 'சிகுரட்டி' என்ற சொல்லைத் தேடினால் டிபெண்ஸ், கவர், சேர்ப்டி, போன்ற பல சொற்களைப் பெறமுடியும். அதேபோல் சிங்களத்திலும் ஆரக்சாவ என்ற சொல்லைத் தேடினால் சுரஸ்சித்த, ஆவரன, சுரக்கும் போன்ற சொற்களும் கிடைக்கிறது.

மஹ்ரமி என்று ஆரம்பித்து இது என்ன வேறு எங்கே போகிறது என சிந்திக் கிறீர்களா? நிச்சயம் இவை இரண்டிற்கும் தொடர்பு உண்டு.

இலங்கையைப் பொருத்தவரை ஒருபெண்ணுக்கு எந்த நேரமும் எங்கும் சென்று பாதுகாப்புடன் வரமுடியும் என்றால் நீங்கள் கையில் வாளை எடுத்துக் கொண்டு என்னுடன் யுத்தம் புரிய வருவீர்கள். ஆனால் இலங்கையைப் பொருத்தவரை  உயிருக்கு அச்சுறுத்தல் இன்றி ஒரு பெண்ணால் எங்கும் சென்று வரக் கூடிய பாதுகாப்பு உண்டு என்றால் சிலர் ஒத்துக் கொள்வீர்கள். ஆனால் சிலர் உடல் ரீதியாக இல்லையே என்பீர்கள். மானங்கெட்டவளுக்கு அது பிரச்சினை அல்ல. இதை இன்னும் தெளிவாகக் கூறினால் ஒருபெண்ணுக்கு  மானத்துடன் திரும்பி வரமுடியாது என்பீர்கள்.

இஸ்லாமிய கோட்பாட்டு ரீதியில் மஹ்ரம் என்பது உயிருக்கான பாதுகாப்பு மட்டுமல்ல. உயிர் உடைமை மானம், கற்பு, கௌரவம் இப்படி அடுக்கிக் கொண்டு போகலாம். சிலர் இதனை தவறாகப் புரிந்துள்ளனர் என்பதற்கு பல உதாரங்கள் உண்டு.

அண்மையில் நடந்த ஒருசம்பவம் இதோ...

சன நடமாட்டம் குறைந்த ஒரு இடத்தில் தனி வீடு அமைத்துள்ள ஒரு முஸ்லிம் பெண்மணி தன்னந்தனியாக பிரதான பாதையில் நிற்கிறார். என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டேன். மகளை தனியார் வகுப்பிற்கு அனுப்பு வதற்காக பஸ் ஏற்றி விட வந்தேன். இன்று நாட்டு நடப்புகள் காரணமாக ஒதுக்குப் புறப்பாதையில் தனியே அனுப்பப் பயமாக உள்ளது என்றார். ஆனால் அவருடைய மகள் பஸ்ஸில் கண்டி சென்று மீண்டும் திரும்பும் வரை தனியாகத் தானே செல்லவேண்டும். ஆனால் அது பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏனென்றால் உயிருக்கான பாதுகாப்பையே 'பாதுகாப்பு' என்பதன் மூலம் கருதுகின்றனர்.

எனவே மஹ்ரம் என்ற அரபிப் பதத்தின் சரியான கருத்தைப் புரிந்திருந்தால் அவ்வாறான நிலைமைகளில் தனி வழியே வருவதும் தவறு. தனியாக பஸ்ஸில் செல்வதும் தவறு என்பதை உணரமுடியும். 

எனவே மஹ்ரம் என்பது உடலுக்கு அல்லது உயிருக்கு வழங்கும் பாதுகாப்பு மட்டுமல்ல. அது மானத்திற்கும் வழங்கப் படும் உத்தரவாதம் என்பதை புரிந்து கொண்டால் அனேக அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ளமுடியும்.


1 comment:

  1. சவூதி அரசாங்கத்தின் ஸரிஹா சட்டம் மஹ்ரம் தொடர்பில் எவ்வாறு நடக்கின்றது ?
    பணிப்பெண்களை வேலைக்கமர்த்துவது தொடர்பில் இஸ்லாமிய கோட்பாட்டு ரீதியிலான‌ மஹ்ரம் சவூதி அரசாங்கத்தின் ஸரிஹா சட்டத்தில் இல்லையா ?
    இஸ்லாமிய மஹ்ரம் சட்டம் மீறப்பட்டு இஸ்லாமிய கொலைக்கு கொலை சட்டம் நிறைவேற்றப்படலாமா ?
    ரிஸானா நஃபீக் அவர்களின் விடயத்தில் இவற்றை பார்ப்பது நமது கடமையல்லவா ?

    ReplyDelete

Powered by Blogger.