குவைத் வாகன விபத்தில் இலங்கையர் வபாத்
குவைத் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் தோப்பூர் 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வபாத்தாகியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வாகன விபத்தில் வபாத்தானவர் கலீல் ரஹ்மான் றமீஸ் எனும் 27 வயது இளைஞராவார்.
வீட்டு எஜமானியின் தோட்டத்திற்குச் சென்று வரும் வழியில் குப்பை அள்ளும் வண்டியில் மோதுண்ட போதே இவர் ஸ்தலத்தில் வபாத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணமான கலீல் ரஹ்மான் றமீஸின் தந்தை கடந்தகால வன்செயலின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானவர் எனவும் குடும்பத்தின் இரண்டு சகோதரிகளையும் கரைசேர்க்க வேண்டிய பொறுப்புக் காரணமாகவே இவர் வெளிநாட்டுக்குச் செல்ல நேர்ந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவருடன் சென்ற இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வபாத்தாகியுள்ளார்.
Inna Lillahi Wainna Elaihi Rajihoon. As a Muslim we have to help his family, please take any steps by Jaffnamuslim. we are ready to help.
ReplyDelete2 murai haj seaitha al haj ramees
ReplyDeleteAvarudaiya paavagkalai allah
manniththarulvaanaah