நாட்டின் முஸ்லிம் பகுதிககளில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)
(Ashraff.A.Samad)
கொழும்பு இஸ்ஹாணியா அரபிக் கல்லூரியின் 65வது சுதந்திர தினத்தினை முண்னிட்டு துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது. படத்தில் வலது குறைந்தவர்களுக்கு சக்கர நாற்காலியொன்றை புரவலர் ஹாசீம் உமர் வழங்குவதையும் அருகில் இஸ்ஹாணியா அரபுக் கல்லூரி பணிப்பாளர் ஹபீப் உபைத் நியாசும் அருகில் காணப்படுகின்றனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இலங்கையின் 65வது சுதந்திர நிகழ்வை முன்னிட்டு கொழும்பு-12 வாழதை;தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப்பள்ளிவால் நிருவாகமும் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி பைதுல்மால் நலன்புரி அமைப்பும் தேசிய தின நகழ்வினை இன்று (04) அல்-ஹிக்மா கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தது.
மேற்படி நிகழ்வில் கொழும்பு மாநகர சபை எதிர் கட்சித் தலைவர் அஜந்த லியனகே , குணசிங்கபுர போதி றுக்காராமய விகாரதிபதி லியன்வெல்ல சமித்த கிமி, இஹ்ஸானியா அரபிக் கல்லூரி அதிபர் மௌலவி எம்.எப்.எம்.பறூக், குணசிங்கபுர சிவன் கோவில் ரஜீவ குருக்கள், கெசல்வத்த பொலிஸ் பகுதி அதிபதி கே.டி.ஜே. சிசிர, அல்-ஹிக்மா கல்லூரி அதிபர் கே.எம். நாளிர்இ அகில இலங்கை ஜமியதுல் உலமா உப தலைவர் மௌலவி தாஸிம் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின்போது மாணவச் சிறார்களுக்கு மதிய உணவு கொண்ட செல்லும் பெட்டிகளும் வழங்கப்பட்டன.
Bseer Ali
இலங்கையின் 65ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அனைத்துக் கிளைகளுடாகவும் வித்தியாசமான பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஜமாஅத்தின் ஹெம்மாதகம கிளையின் ஏற்பாட்டில் 1800 தேசியக் கொடிகள் வழங்கும் நிகழ்வு ஹெம்மாதகமயில் இடம்பெற்றது.
ஹெம்மாதக பிரதேசத்திலுள்ள வீடுகள் வர்த்தக நிறுவனங்களுக்கு இவை பகிர்ந்தளிக்கப்பட்டதாக ஜமாஅத்தின் ஹெம்மாதகம கிளை பொறுப்பாளர் ஹிஸாம் ஜவாத் தெரிவித்தார்.
(எம்.ரீ.எம். பாரிஸ்)
இலங்கையின் 65வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு கல்குடா அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வு இன்று 04.02.2013 அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி உள்ளிட்ட பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள், மதகுருமார்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வையொட்டி 100 வறிய மாணவர்களுக்கான பாதணி உபகரணங்கள் மற்றும் பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், பொது நிறுவனங்களுக்கு மின்விசிறிகள் வழங்கிவைக்கப்பட்டன.
Post a Comment