இலங்கை ஜனநாயகத்தில் பின்நோக்கிச் செல்கிறது - அமெரிக்க பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
இலங்கை ஜனநாயகத்தில் பின்நோக்கிச் செல்வதாக அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின், ஆசிய பசுபிக் உபகுழுவில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றில் துரிதமான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை தான், அமெரிக்கா உள்ளக நடைமுறைகளுக்கு ஆதரவு அளித்ததற்கு பிரதான காரணம். எனினும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மெதுவாகவே நடைமுறைப்படுத்தப்படுவது அமெரிக்காவை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் வடக்கு மாகாணசபைக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படாதது, அமெரிக்காவை வெறுப்படைய வைத்துள்ளது.
இலங்கை ஜனநாயகத்தில் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தவறியதன் விளைவாகவும், தலைமைநீதியரசர் பதவிநீக்கத்தின் மூலமும் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை ்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு பரந்தளவிலான ஆதரவு இருந்தது. இந்தமுறை கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கும் அதுபோன்ற ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment