சுத்தமான காற்று விற்பனைக்கு வந்தது
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இங்கு வாகனங்களும், தொழிற்சாலைகளும் பெருகிவிட்டன. இதனால் தலைநகர் பெய்ஜிங்கில் சுற்றுச்சூழல் மாசுபட்டு விட்டது. தூசிகள் காற்றில் அதிகமாக கலந்துள்ளன.
எனவே சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. ஆகவே, அங்கு கேன்களில் சுத்தமான காற்று அடைத்து பிரபல தொழில் அதிபர் சென்குவாங்பியோ (44) விற்பனை செய்கிறார். ஒரு கேனின்விலை 120 ரூபாய். இதுவரை 80 லட்சம் கேன்கள் விற்று தீர்ந்துள்ளன.
சுத்தமான காற்று அடைக்கப்பட்ட கேன்களை அறிமுகப்படுத்த கடந்த வாரம் அவர் ஏராளமான கேன்களை இலவசமாக வினியோகம் செய்தார்.
Post a Comment