Header Ads



மாணவி ஏன் திருடினாள்..? விசாரணை மேற்கொள்ள ஹக்கீமுக்கு மஹிந்த உத்தரவு (வீடியோ)


பாடசாலைக்கு வர்ணம் பூசுவதற்கு பணம் தேடுவதற்காக அயல் வளவில் தேங்காய் பறித்து நீதிமன்ற தீர்ப்புக்குள்ளாகியுள்ள சிறுமி   தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு வர்ணம் பூச அரசாங்கத்திலிருந்து நிதி ஒதுக்கும் போது மாணவர்களிடம் பணம் கோரப்படுகிறதா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பந்துல குணவர்தன ஆகியோருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளர்.

.........................................................................

அயல் வீடு காணியொன்றிலிருந்து தேங்காய்களை திருடியதாக கூறப்படும் 13 வயது சிறுமியை கடந்த 6ஆம் திகதி 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில்  விடுவிக்குமாறு ஹொரணை மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த சிறுமி 320 ரூபா பெறுமதியான எட்டு தேங்காய்களை திருடியுள்ளதாக  பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

ஹொரணை பகுதிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் இந்த சிறுமி தான் தேங்காய்களை திருடியமைக்கான காரணத்தையும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

பாடசாலை கட்டடத்திற்கு நிறப்பூச்சினை பூசுவதற்காக மாணவர்களிடமிருந்து  சேகரிக்கப்படுவதாக கூறப்படும் நிதியை செலுத்துதற்காகவே தான் எட்டு தேங்காய்களையும் திருடியதாக குறித்த சிறுமி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த நிதியை சேகரிப்பதற்கான தேவை எதுவும் இல்லை என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.




3 comments:

  1. நீதி அமைச்சர் ரவுப்ஹக்கீம்தான்னு ஜனாதிபதிக்கு இன்னும் நினைவு இருக்கு...... ஆனா ஹக்கீமுக்குத்தான் தான் எந்த அமைச்சர்னு நினைவில்லாம இருக்கு..........

    ReplyDelete
  2. நீதி அமச்சரிடமா?கல்வி அமச்சரிடமா?என்று கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன்!!

    ReplyDelete
  3. there is recently made famous govt. school in Akkaraipattu. they are demanding up to Rs 50,000.00 as admission fee. admission has been refused for some students who live in the vicinity due to this issue. they are collecting this indirectly through an external body. now fathers may go out for coconut trees. who cares?

    ReplyDelete

Powered by Blogger.