மாவனல்லையில் பொதுபல சேனாவின் கூட்டம்..!
மாவனல்லை நகரில் இன்று (24. 02 . 2013) இனவாத பொது பல சேனா கூட்டம் + ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பரவலான பேச்சாக காணப்பட்டது. அநேகபேரின் வாயில் இதே பேச்சுத்தான் காணப்பட்டது. வாயில் இந்தப் பேச்சும் மனதில் அச்சமும் காணப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் எந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை
அமைதியான முறையில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள், அவர்களின் திட்டங்கள், கோரிக்கைகள் பற்றி இதுவரை ஒழுங்கான தகவல்கள் ஒன்றும் இதுவரை கிடைக்கவில்லை..
மாவனல்லை நகரில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்டம் பவ்த்த மந்திரில் நடைபெற்றுள்ளது. பெருமளவு மக்கள் இதில் பங்குபற்றாவிட்டாலும், 20 - 30 வயதுக்கிடைப்பட்டகளும் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் Facebook மூலம் பரப்ப படும் இனவாதம் என்று புரிய முடிகிறது.
கடைசிப் பந்தியில் குறிப்பிட்டுள்ள விடயம் மிக முக்கியாமான விடயம். BBS இன் முக்கிய ஆயுதங்களில் ஒன்று facebook .
ReplyDeleteஆக்கிரமிக்கும் போது பயந்தோடும் சமுதாயமாக இருக்க வேண்டாம். இது தான் தம்புள்ளையில் தொடங்கி இன்றைய நிலை வரை நம்மை வம்புக்குள் மாட்டி பின்னடைய வைத்தது. அத்துமீறும் போது நமக்கு அதிகாரம் உள்ளது நம்மை காத்துக் கொள்ள முன்னால் நிற்க. இது வன்முறை அல்ல. வன்முறைக்கு எதிரான நிலைப்பாடு. நமக்கோ உயிரில் பயம் அப்போ எல்லருமாய் அழிய வேண்டியது தான். இப்பொழுதுள்ள பிரச்சினை சாதாரணமானது என்றாலும், நமது அதிகரித்த "பயம்" இதை விஸ்பரூபம் எடுக்க வழி கொள்ளலாம்.