'காஷ்மீர் பிரச்சினை தீர்வு காணவிட்டால் அது உலகின் அமைதிக்கே ஆபத்து'
காஷ்மீர் பிரச்சினை குறித்து தீர்வு காணவில்லை என்றால் அது இரு நாடுகளுக்கும் மற்றும் உலகின் அமைதிக்கே ஆபத்து ஏற்படும் என பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் தெரிவித்தள்ளார். அவர் இதுதொடர்பில் கூறியிருப்பதாவது,
இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் ஒருமைப்பாடு தின விழாவை முன்னிட்டு நடந்த அரசு விழாவில் ராஜா பர்வேஷ் பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சினை குறித்து தீர்வு காண வேண்டும். அவ்வாறு தீர்வு ஏற்படாவிட்டால் உலகின் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என பேசினார். பாகிஸ்தானில் 1990 க்கு பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீர் ஒருமைப்பாடு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக மக்களின் பங்கு:
காஷ்மீர் பிரச்சினை குறித்து தீர்வு காண உலக மக்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என அவர் அழைக்கிறார். இது குறித்து அவர் அந்நாட்டு வானொலியில் பேசும் போது, துரதிஷ்டவசமாக இந்திய அரசின் முரட்டு நடவடிக்கையால் தீர்வு காண இயலவில்லை. பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறது. ஐ.நா., மூலம் தீர்வு காணவும் காஷ்மீர் அரசு முயல வோண்டும். காஷ்மீர் மக்கள் தங்களது உரிமையை நிலைநாட்ட சுயமாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றார். அவரது பேச்சு எதிர்வரும் தேர்தல் குறித்த கண்ணோட்டத்திலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment