அரசாங்கத்தின் போக்கு கவலையளிக்கிறது - ரவூப் ஹக்கீம் வேதனை
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர்சேகு தாவூத்திற்கு அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து அரசாங்கம் தன்னுடன் எத்தகைய பேச்சுக்களையோ அல்லது அதுதொடர்பிலோ தமக்கு அறிவிக்கவில்லையென அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் கலந்துகோண்டு உரையாற்றியுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பஷீருக்கு அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்றவகையில் அரசாங்கம் என்னுடன் கலந்துபேசவில்லை. இதுவிடயத்தில் அரசாங்கத்தின் போக்கு கவலைக்குரியது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் என்மீது குற்றம் சுமத்துவதில் பயன் இல்லை. நான் வெளிநாட்டில் இருக்கும்போதே அமைச்சர் பஷீர் சேகுதாவூத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி எனக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
mmm...you are telling true,we have to believe it..
ReplyDeletepeople know well about our politician's drama ....