அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வேட்டை
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 4பேர், பலியாயினர். அமெரிக்காவில், சமீப காலமாக, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கனெக்டிக்கட் மாகாணத்தில், கடந்த டிசம்பர், 14ல், நடந்த துப்பாக்கி சூட்டில், 27 பேர், பலியாயினர்.
இதனால், துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, அங்கு மக்களுக்கு துப்பாக்கி வழங்கும் முறையில், கட்டுப்பாடுகளை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள, ஆரஞ்ச் நகரில், இரண்டு நாட்களுக்கு முன், துப்பாக்கி ஏந்திய, 20 வயது நபர், நடத்திய தாக்குதலில், மூன்று பேர், கொல்லப்பட்டனர்.
அந்த நபர், சாலையில், காரில் வந்தவர்களை சுட்டுக் கொன்று, காரை கடத்தி சென்றார். பின் அவரை போலீசார் துரத்தி சென்றபோது, காரில் இருந்து வெளியில் வந்த அவர், தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.
Post a Comment