'ஈரான் தற்போது அணு ஆயுத நாடு' - அஹ்மதி நஜாத் அறிவிப்பு (வீடியோ)
ஈரான் புரட்சியின் 34 ஆவது ஆண்டு நிறைவு வைபவம் இடம்பெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோஷத்துடன் தலைநகரை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
இதில் பங்கேற்ற ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதினஜாத் கூடியிருந்த மக்களை நோக்கி, ‘ஈரான் தற்போது அணு ஆயுத நாடு’ என அறிவித்தார். அத்துடன் நாட்டின் உண்மையான சீர்திருத்தத்திற்கு மேற்கு நாடுகள் தடங்கலாக செயற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். புரட்சியை ஒட்டி நாடு பூராகவும் இவ்வாறான பேரணிகள் இடம்பெற்றது.
Post a Comment