Header Ads



கல்முனையில் மூவருக்கு மரண தண்டனை


(Tm) கொலைக்காக மற்றுமொருவரை கொலைச்செய்தார்கள் என்று குற்ற    ஞ்சாட்டப்பட்ட மூவரை குற்றவாளிகளாக இனங்கண்ட கல்முனை நீதிமன்றம் அந்த மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அம்பாறை இறக்காமம்  பிரதேசத்தில் தமது உறவினர் ஒருவரை கொலை செய்தவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியினால் வெட்டியும் கொலைசெய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூவருக்கு கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இறக்காமம் நான்காம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜ.நூர்தீன் அல்லது ரசாக் என்றழைக்கப்படுபவரை கடந்த 2002 ஆம் ஆண்டு அதேபிரதேசத்தில் வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டு கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் தமது உறவினர் ஒருவரை கொலை செய்துள்ளதாகவும் அதனால் அவரை கொலை செய்து பழிக்கு பழிவாங்குவதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரையும் பொலிசார் கைது செய்தனர்.

 இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும்  அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு ஆரம்ப வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்தன  பின்னர் கல்முனை மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்கள் மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட நீதிமன்றம் அந்த மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

குற்றவாளிகள் மூவரையும் சாகும்வரை தூக்கிலிடுமாறு மரணதண்டனையை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 

No comments

Powered by Blogger.