காத்தான்குடி முஸ்லிம் வர்த்தகரின் கார் வாகனம் ஆயுத முனையில் அபகரிப்பு
(abuaasiya + பழுளுல்லாஹ் பர்ஹான்)
தனது தொழில் தேவையின் நிமித்தம் பொலன்னறுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த காத்தான்குடி பூநொச்சிமுனையில் வசிக்கும் HM.ஹசன்தீன் என்பவர் செலுத்திச் சென்ற வாகனம் (கார்) இன்று(26.02.2013) காலை ஐந்து மணியளவில் புணானை பகுதியில் வைத்து ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் அபகரித்துச் செல்லப்பட்டது,
குறித்த ஹசன்தீன் என்பவர் ஒரு தனியார் வர்த்தக நிறுவனமொன்றில் விற்பனை மேற்பார்வையாளராகப் பணிபுரிவராவார்.அந்நிறுவனத்தினாலேயே குறித்த வாகனம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்குறித்த சம்பவம் தொடர்பில் ஓட்டமாவடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment