முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட சிங்களவர்கள் தயாரில்லை - முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா
(இக்பால் அலி)
முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளனர். அவர்களுக்குப் பின்னால் அணிதிரளவோ, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுதற்கோ சிங்கள மக்கள் தயாரில்லை. வெளிநாட்டினுடைய டொலர்களுக்கு பின்னால் செல்லும் ஒரு சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி சுதந்திர தின நிகழ்வில் மதவாம் இனவாதம் போன்றவற்றிற்கு இந்த நாட்டில் இடமளிக்கப்போவதில்லை என்று தெளிவாகச் சொல்லியுள்ளார் என்று மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அக்குரணை ஜம்மியதுல் உலமா சபையினர் மத்திய மாகாண முதல் அமைச்சரின் இல்லத்தில் சிநேகபூர்வமான சந்திப் பொன்று 05-02-2013 மாலை 5.00 முதல் 6.00 மணி வரை நடைபெற்றது. அந்தச் சந்திப்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வழங்கும் ஹலால் சான்றிதழ் மூலம் இலங்கைக்கு பாரிய பொருளாதரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளன. இந்தச் தரச்சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களே வெளிநாட்டுகளுக்கு கூடுதலாக ஏற்றுமதி செய்யக் கூடியதாக உள்ளன. இதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கதின் மீது சேறு பூசுவதற்காக வெளிநாட்டுச் சக்திகள் மூலம் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சதி முயற்சியாகும்.
ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகள் யாவும் இலங்கைக்கு முழு ஆதரவு வழங்கின. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை அமர்வுக்கு முன் ஒரு இன முரண்பாட்டை தோற்றிவிக்க எடுக்கும் முயற்சிகள்தான் இவை. இதற்கு சிங்கள மக்கள் இடமளிக்கப் போவதில்லை. தொன்று தொட்டு சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் அந்நியோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டுச் சக்திகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்கின்றன. அவர்களுடைய சதித் திட்டங்கள் பல்வேறு கோணங்களில் வரலாம். அது இலங்கை நாட்டில் எடுபடப்போவதில்லை
அக்குரணை பிரதேச மக்களின் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை தன்னால் இயன்றளவு செய்து தருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அக்குரணை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஷ;ஷய்க் சியாம் ஜம்மியதுல் உலமா சபையின் நிகழ்ச்சி இணைப்பதிகாரி ஐ. ஐனுடீன் மற்றும் முதல் அமைச்சரின் இணைப்பதிகாரி ரஷட் எம். ரியாழ் உள்ளிட்ட ஜம்மியதுல் உலமா சபை முக்கிய உறுப்பினாகள் கலந்து கொண்டனர்.
முதமைச்சரே இதைப்போய் சிங்களவர்களிடம் கூறுங்கள்.உலமா சபைக்கு கூறுவதால் என்ன பயன்?
ReplyDelete