Header Ads



கடலில் மூழ்கி இரு மாணவர்கள் வபாத் - வெலிகமயில் சோகம்

(எம். எஸ். பாஹிம்)

கடலில் நீராடிய இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த பரிதாப சம்பவம் வெலிகம பகுதியில் இடம்பெற்றது. இம்முறை க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்த உறவினர்கள் இருவரே இவ்வாறு இறந்துள்ளதோடு இவர்களின் சடலங்கள் நேற்று 04-02-2013 காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் வெலிகம நகரம் சோகத்தில் மூழ்கியிருந்ததோடு இருவரதும் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் பாலத்தடி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றன.

வீட்டாருக்குத் தெரியாமல் நேற்று முன்தினம் மாலை வெலிகம பெலேன சிறிய பாலத்திற்கு அருகில் நீராடிய இரு மாணவர்களும் கடலில்உள்ள கல்லொன்றுக்கு அருகில் நீந்திச் சென்ற போதே நீரில் அடித்துச் செல்லப்பட்டு ள்ளனர்.

இருவரையும் தேடும் பணிகள் காலி கடற்படையினரின் உதவியுடன் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை இடம்பெற்றது. ஒருவரது சடலம் நேற்று காலை 6.15 மணிக்கும் மற்றவரது சடலம் 10.30 மணியளவிலும் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டன.

வெலிகம அறபா தேசிய பாடசாலையில் பயிலும் எம். ஏ. எம். அப்ராஸ் (14), மாத்தறை சென் சேவிசஸ் கல்லூரியில் கற்கும் எம். எம். ரிஷாத் அஹ்மத் (14 வயது) ஆகியோரே இவ்வாறு இறந்துள்ள னர். 

இவர்கள் வெலிகம கொலேதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களாகும். இருவரதும் இறுதிக் கிரியையில் பெருந்திரளான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 comment:

Powered by Blogger.