இந்தியாவில் முஸ்லிம் பகுதிகளில்தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா, தனது தந்தையும் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லாவுடன் அஜ்மீர் வந்திருந்தார்.
காஷ்மீரில் மாணவிகளால் நடத்தப்படும் இசைக்குழுவை தடை செய்ய மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது உமர் அப்துல்லா கூறியதாவது:-
மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்த 4 நபர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதை போன்று பெண்களுக்கு எதிரான மிரட்டல்களை விடுக்கும் பேர்வழிகளுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக எனது அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் பெண்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை வெளியிட முடிகிறது. சுற்றுலாவுக்காக எங்கள் மாநிலத்துக்கு வரும் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடிகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகமாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment