முசலி பிரதேச சபை கண்திறக்குமா..? (படம்)
(எஸ்.எச்.எம்.வாஜித்)
மன்னார் முசலி-பண்டரவெளி தபாலகம் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் இயங்காமல் இருப்பதனால் அப்பிரதேசத்தில் உள்ள மீள்குடியேற்ற கிராமங்களான மணற்குளம்,இலந்தைக்குளம்,வெளிமலை,பொற்கேனி மற்றும் புதுவெளி ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் சிரமங்களை மேற்கொள்கின்றனர்.இப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியற்றப்பட்டு புத்தளம்,குருனாகல் மற்றும் அனுராதபுரம் ஆகைய பிரதேசங்க்களில் அகதிகளாக வாழ்ந்தனர்.2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியேரினர். 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த தபாலகத்தை புணர் நிர்மாணம் செய்து அதை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பிரதேச மக்களின் வாக்குரிமைகளை கொள்ளை கொண்ட முசலி பிரதேசசபை உறுப்பினர் மதிப்புக்குறிய அபூபக்கர் ஜெசீல் அவரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அப்பிரதேச சபை உறுப்பினர் இதுவரைக்கும் அப்பிரதேச மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை தேவைகளையும் செய்து கொடுப்பதில்லையெனவும் அவருக்கு வாக்களித்த,பாடுபட்ட இளைஞர்கள் இன்னும் மனவேதனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பிரதேத்தில் தபாலகம் இன்மையால் ஆசிரியர்கள்,மாணவர்கள்,மற்றும் உயர் அதிகாரிகள் அப்பிரதேசத்தில் இருந்து அயல் பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர்.மன்னார்-முசலிப்பிரதேசத்தில் எல்லா வசதிகளுடன் கூடிய எந்த ஒரு தபாலகமும் முசலியில் இதுவரைக்கும் இல்லை முசலிப் பிரதேசத்தில் யுத்தத்தினால் அழிவடைந்த தபாலகங்களை புனர் நிர்மானம் செய்வதற்கு முசலிப்பிரதேசபை செயலாளரோ முசலி மக்களின் வாக்குகளை கொள்ளை கொண்ட பிரதேசசபை உறுப்பினர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மன்னார்-முசலிக்கு விடிவு கிடைக்க வேண்டுமென்றால் முசலி மக்களின் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும் என முசலி கல்விமாண்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Ewarinal musali pradesa sabaiku oru pirauosanum ila
ReplyDeletewell Done
thampi intha vidayaththai thafalminister kku arivikkavum
ReplyDelete