Header Ads



''முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியாது''


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அந்தக் கட்சியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியால் நடவடிக்கை எடுக்க முடியாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு, பின் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டது. 

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு எதிராக, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு 6 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தது. 

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து, அரசாங்கத்துக்கு மாறியதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், முஸ்லிம் காங்ரஸூக்கும் தொடர்பில்லை என குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இந்த மனுக்கள் இன்று (19) விசாரிக்கப்பட்டதன் பின்னர், கட்சியைவிட்டு விலகியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என, நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. ஷிரானி பண்டாரனாயகா இருந்திருந்தால்....?

    ReplyDelete

Powered by Blogger.