Header Ads



ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத்தின் ஆசை நிறைவேறுமா..?


ஈரான் சார்பில், விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலத்தில் முதல் ஆளாக செல்ல தயாராக இருக்கிறேன்,'' என, ஈரான் அதிபர், அகமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாடு, அணு ஆயுதம் தயாரிப்பதாக, உலக நாடுகள் சந்தேகிப்பதால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், தங்கள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம், குரங்கை, விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்.விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு, உயிருடன் திரும்பியதன் மூலம், தங்களது விண்வெளி திட்டம் வெற்றி பெற்று விட்டதாக ஈரான் கூறி வருகிறது. 

ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், "ஈரானின் விண்வெளி திட்டம் கவலைக்குரியது' என, தெரிவிக்கின்றன. "ராக்கெட் சோதனை என்ற போர்வையில் ஈரான், ஏவுகணை தயாரிக்கலாம்' என, அந்நாடுகள் சந்தேகிக்கின்றன.

இதற்கிடையே, ஈரான் அதிபர் அகமதி நிஜாத் குறிப்பிடுகையில், ""நம்நாட்டை சேர்ந்த, ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பினால், விண்வெளி திட்டத்தில் வெற்றி கண்டு வருகிறோம். விண்வெளிக்கு குரங்கு அனுப்பப்பட்டதை, மேற்கத்திய நாடுகள் நம்ப மறுக்கின்றன. ஈரான் விண்கலம் மூலம், விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டால், முதல் ஆளாக நான் செல்ல தயாராக இருக்கிறேன்,'' என்றார். 

2 comments:

  1. அது தானே குரங்கு போய் வந்திட்டுது.. இனி மனிசன தானே அனுபோனும்! மறுபடியும்...

    ReplyDelete
  2. you may be from BABOON family

    ReplyDelete

Powered by Blogger.