றிசானா தொடர்பில் தவறிழைத்தாராம் - அமைச்சர் டிலான் மீது நம்பிக்கையில்லா பிரேரணை
அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளது.
இந்த யோசனையை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா நேற்றைய தினம் நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.
ஜோசப் மைக்கல் பெரேரா, லக்ஸ்மன் கிரியல்ல, சம்பிக்கா பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதூர் பணிப்பெண்ணான ரிஷானா நபீக் தொடர்பில், காத்திரமான நடவடிக்கையை எடுக்க, அமைச்சர் டிலான் பெரேரா தவறிவிட்டதாக, இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Ennatan Nampikkai illa prayrenai kondu vantalum kaintupone malar ini saremahuma.?
ReplyDelete