அக்குறணை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் அமளி துமளி
(ஜே.எம்.ஹபீஸ்)
அலவத்துகொட பிரசேத்தில் சேவையில் ஈடுபட முச்சக்கர வண்டி ஒன்றிக்கு அனுமதி வழங்குமாறு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அக்குறணை பிரதேச சபைக்கு விடுத்திருந்த வேண்டுகோளை சபையின் தலைவர் ஏ.எம்.எம். சிம்சான் முன் வைத்த போது உப தலைவர் அமரஜீவ இந்திர குமார உற்பட்ட மூன்று உறுப்பினர்கள் அதனை எதிர்த்து இறுதியில் பெறும் அமளி துமளி ஏற்பட்டு மூவர் சபை நடவடிக்கைகளை விட்டும் வெளிநடப்புச் செய்தனர்.
மத்திய மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான அமைச்சரான முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவினால் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று தலைவர் சிம்சான் இங்கு தெரிவித்தார்.
இருந்த போதும் ஒரு முச்சகக்ர வண்டிக்கு மட்டும் அனுமதி வழங்கினால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். சில முச்சக்கர வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த அனுமதி பெற்ற சிலர் ஐம்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரை பணம் பெற்று தமது உரிமையை உத்தியோகப் பற்றற்ற முறையில் பிறருக்கு வழங்குவதாகவும் பல அங்கத்தவர்கள் சுட்டிக் காட்டினர். இதனால் இப் பிரேரனையை தொடர்பாக விளக்கமளிக்கவும் விளக்கம் பெறவும் இன்னும் ஒருமாதகால அவகாசம் வேண்டும் என்றும் இது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்கு பின் போடுமாறும் உப தலைவர் உற்பட மூன்று உறுப்பினர்கள் தெரிவிதத்னர். இருந்த போதும் தலைவர் ஏ.எம்.எம். சிம்சான் இப் பிரேரனை சம்பந்தமாக வாக்கெடுப்பை நடாத்தினார். இப் பிரேரனைக்கு ஆதரவாக தலைவர் உற்பட ஒன்பது அங்கத்தவர்களஆதரவாக வாக்களித்தனர். இதில் ஐந்து எதிர் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர்.
தலைவர் ஏ.எம்.எம். சிம்சான், சரத் அமரகோண், சிரிமல் விஜேதுங்க, அனுறுத்த ஜயசுந்தர ஆகிய ஆழும் கட்சி உறுப்பினர்களும் அஜ்மீர் பாரூக், எம்.ஐ.எம்.மன்சூர், எஸ்.எம்.பீ டி அல்விஸ், எஸ்.எம்.எம். ஹுஸைன், எம்.ஏ.எம். முஹ்சீன் ஆகிய எதிர் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிதத்னர்.
உப தலைவர் அமரஜீவ இந்திர குமார ஐக்கிய மக்கள் சதந்திர முன்னனியை சேர்ந்த சமிந்த திலக்கரத்ன, நெரஞ்சன் கருனாரத்ன ஆகியோர்; வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டனர்.
பின்னர் சபையில் கடும் அமளி துமளி எற்பட்டதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர்களான சமிந்த திலகரத்ன, நெரஞ்சன் கருனாரத்ன ஆகிய இருவரும் வெளி நடப்பு செய்தனர்.
Post a Comment