Header Ads



ஆரம்பக்கல்வி சம்பந்தமான நியமங்களைத் தயாரிக்கும் நிகழ்வு



(அனாசமி)

கல்வியமைச்சினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய கலைத்திட்டத்திற்கு அமைவாக தேசிய கல்வி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்பக்கல்விக்கான புதிய நியமங்களைத் தயாரிக்கும் வேலைத்திட்டம் நாடுமுழுவதிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதிலிருமிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய ஆலோசகர்களுக்கான செயலமர்வு அண்மையில் தேசிய கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. புதிய நியமங்களைத் தயாரிக்கும் தேசி;ய பயிற்சிப்பட்டரையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் கலந்து கொண்டார். 

அதற்கமைவாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு பாடசாலையான அக்கரைப்பற்று முனவ்வறா ஜூனியர் கல்லூரியாகும். அப்பாடசாலையிலுள்ள தரம் ஒன்று மாணவர்களில் ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஒன்று கூடல் கடந்த வெள்ளிக்கழமை (22.02.2013) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ். ஏ.ஜி. அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு புதிய நியமங்கள் மற்றும் ஆய்வு சம்பந்தமாக விளக்கமளிப்பதையும், பாடசாலையின் ஆரம்பக் கல்விப்பிரிவுக்கான வலயத்தலைவர் ஏ. மனூனும் கலந்து கொண்டார். பெற்றோரிடமிருந்து தங்களது குழந்தைகளின் நடத்தைகள், துலங்கள் மற்றும் திறன்கள் பற்றிய விடயங்கள் அங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments

Powered by Blogger.