பௌசியின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்
(அஸ்ரப் ஏ. சமத்)
கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெப்ரவரி 26ம் திகதி விஜயம் செய்து அமைச்சர் பௌசியின் சொந்த நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந் நிகழ்வுகள் கல்லூரி அதிபர் கலாநிதி ஹர்ஜான் மன்சுர் தலைமையில் நடைபெறும். பெப்ரவரி செய்வாய்கிழமை பி.பகல் 03.30 மணிக்கு கல்லூரிக்கு விஜயம் செய்யும் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய வகுப்பறைக் கட்டிடத்தினை திறந்து வைப்பார்.
அதன் பின்னர் கல்லூரியின் ஹாஜரா மண்டபத்தில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவிகள் முன் உரையாற்றுவார். அமைச்சர் பௌசி மேல்மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி ஆகியோரின் அழைப்பின்பேரிலேயே ஜனாதிபதி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்கின்றார்.
Post a Comment