பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஏற்பாட்டில் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
(அலி அக்பர் பைசர்)
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.S. தௌபீக் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கிண்ணியா பிரதேசத்திலுள்ள பத்து விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 2013-02-05ந் திகதி வழங்கப்பட்டன.
கிண்ணியா பிரதேச சபை பிரதி தவிசாளர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆ.ளு.தௌபீக், கிண்ணியா பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மு.ஆ.நிஹார் உட்பட கிண்ணியா பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், விளையாட்டு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை கையளித்தனர்.
Post a Comment