மே மாதத்தில் மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்குமான தேர்தல்
தமிழ்சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. மத்திய மற்றும் வடமேல் ஆகிய இரு மாகாண சபைகளுக்குமான தேர்தலே மே மாதம் நடுப்பகுதியில் நடத்தப்படவிருக்கின்றது.
குற்றப்பிரேரணை மற்றும் அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் அரசாங்கம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டைச் சோதிக்கும் வகையிலேயே இந்த இரு மாகாண சபைகளுக்குமான தேர் தல்கள் நடத்தப்படவுள்ளன.
இரு மாகாண சபைகளுக்குமான பதவிக்காலம் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடை யவிருக்கின்ற நிலையிலேயே ஏழு மாதங்களுக்கு முன்னர் இரு மாகாண சபைக ளையும் கலைத்து தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் மேல் மற்றும் வட மாகாண சபைத்தேர்தல்களையும் 2014 ஆம் ஆண்டு ஊவா மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் அதற்கு பின்னர் நாடளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கே அரசா ங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரி விக்கப்படுகின்றது.
Post a Comment