பாடசாலையும் பயிர்ச்செய்கையும்
கல்வியின் ஊடாக பரிபூரணத்துவம் மிக்க ஆளுமையைக் கட்டியெழுப்புதல் வேண்டும். அந்த பரிபூரணத்துவத்தை வழங்கும் இடமாக பாடசாலைகள் காணப்படுகின்றன. அந்தப்பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்கள் சிறந்த நடத்தையுடையவர்களாகவும், சிறப்பான நற்பிரஜையாளர்களாகவும், வாழ்க்கைக்கான அனைத்து விடயங்களையும் பெற்றுக் கொள்ளவும் கைக்கொள்ளவேண்டிய ஒரு இடமாகவே பாடசாலை காணப்படுகின்றது. அந்தப்பாடசாலையில் கல்வி மட்டும் போதிப்பதல்ல. அதனுடன் சேர்ந்து வாழ்க்கைக்கான கல்வியையும் வழங்க வேண்டிய பாரியபொறுப்பு ஆசிரியர் பெருந்தகைகளுக்கு உண்டு.
அந்த அடிப்படையில் அண்மைக்காலமாக மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளில் கற்றலுக்குப் புறம்பாக பாடசாலைத் தோட்டம் எனும் செயற்றிட்டம் திவிநெகும திட்டத்துடன் இணைந்ததாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள டாக்டர் ஜலாத்தீன் வித்தியாலயத்தில் தரிசாகக் கிடந்த பாடசாலைக் காணியில் அதிபர் ஏ.எல். பாயிஸ் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் பெரு முயற்சியின் காரணமாக அந்நிலம் பச்சைப்பசேல் எனக் காட்சிதருவது பார்ப்போரை பரவசத்திற்குள்ளாக்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 07.01.2013 அன்று பாடசாலையின் வெளிவாரி மதிப்பீட்டுக் வருகை தந்திருந்த அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள் பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், பாடசாலைத் தோட்டத்தையும், அங்குள்ள காய்கறிகளையும் பார்த்து பரவசமடைந்தனர். அவ்வாறு பார்வையிட்டுக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதுவாகும். படத்தில் ஆசிரிய ஆலோசகர்களான எம்.எல்.எம். இப்றாகீம், என்.எம். சம்சுதீன், யூ.எம். நியாஸிமௌலவி, எம்.ஏ. சவுறுதீன், ஏ.ஜே.நிலுபர், திருமதி ஓசானம், திரு. அல்லிராஜா ஆகியோருடன் அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்வியதிகாரியான எம்.ஏ.சி. கஸ்ஸாலி மற்றும் அதிபர் ஏ.எல். பாயிஸ் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
Post a Comment