பள்ளிவாசல் நிருவாகம் அழுத்தமான கருத்து பரிமாற்றலுக்கு தயக்கம் காட்டக்கூடாது
(Faji)
இன்றைய சில அரசியல் வாதிகளின் அறிக்கைகள் கோமாளிகளின் நகைச்சுவை அரங்கமாக காட்சியளிப்பதும், சமூகம் அதன் விளைவுகளை கருதிற்கொள்ளாமல் ரசிகர்களாகவும் பார்வையாளர்களாகவும் இருப்பது மேலும் மேலும் சமூகத்தின் மீதான அடிமை சங்கிலியின் வளர்ச்சியாகவே இருக்கும்.
அதிகார போராட்டமும் ஆணவமும் தலைக்கேறிய நிலையில் இருக்கும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் நமது சமூகத்தின் மீதான வன்முறைகளையும் ஆக்கிரமிப்புகளையும் மறைப்பதற்க்கான மசாலாக்களாக சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படுகின்றனர். இவர்களின் மூலமாக அராபிய தேசத்து கஜானாக்களின் சில்லறைகள் வர வேண்டியிருக்கிறது.
முஸ்லிம்களின் அரசியல் கட்டமைப்பானது ஒரு பாதுகாப்பான சமுத்திரத்தின் அணைக்கட்டில் திருட்டுத்தனமாக வாய்க்கால்களையும்,நட்டுமைகளையும் உருவாக்கி அதை சிதைத்து விடுவதுபோல இன்று தூய்மை அற்றவர்களால் அழிக்கப்பட்டு கொண்டிக்கிறது. இது தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால் அது மீண்டும் சரிப்படுத்த சிரமமான ஆபத்தாகமாறிவிடும்.
பள்ளிவாயல் நிருவாக சபையின் பொறுப்பு
பள்ளிவாயல் நிருவாகம் அரசியல் அரங்கிற்கு வெள்ளியிலும் சத்தியத்தின் பாதையிலும் கட்சி அபிமானதிற்கும் தனிப்பட்ட கருத்து மோதல்களுக்கு அப்பால் நின்றும் சாட்சியாளர்களாக மாறவேண்டிய தேவை புறக்கணிக்க முடியாதது. பிழையாக வழிநடக்கும் அரசியல் பயணத்தில் ஆசிர்வாதம் வழங்குமானால் அது இஸ்லாமிய விதிமுறைகளை புறக்கணித்து வேறு நிறுவனத்தின் தன்மையை உள்வாங்கிவிடும்
ஒரு சமூகத்தின் உலமாக்களும் உமறாக்களும் வழி தவறி விட்டால் அந்த சமூகம் வழிதவறிவிடும் என்ற ஹதீஸ் தெரியாமல் இருந்திருக்காது. இன்றைய நிலைவரம் இதையே காட்டுகிறது. மதுபான கலாசாரத்துக்கும் வன்முறைக்கும் ஒரே ஊர் சகோதரர்கள் அடிமைபட்டு ஹரமாக்கப்பட குருதி சிந்துவதை நிருவாகம் ஏற்றுக்கொள்கிறதா? இவ்வாறானவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது அருவருப்பான சமூக சிந்தனையை வெளிப்படுத்துகிறது
புகைத்தல் தொடக்கம் பெரும்பாவங்கள் புரிகின்றவர்களுக்கும் கொள்ளை அடிப்பவர்களுக்கும் மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்காதவர்களுக்கும் சில அரை குறை உலமாக்கள் பிராத்தனையும் ஆசிர்வாதமும் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்
அல்லாஹுவையும் அவனது ரசூலையும் நேசிக்கின்ற ஒழுக்கமிக்கவர்களை அரசியலில் உள்வாங்குவதற்கு பள்ளி நிருவாக சபைகள் தவறுவதை அவதானிக்க முடிகிறது. ஒழுக்கமற்ற வன்முறை நிறைந்த அரசியல் கலாசாரம் தடுக்கப்பட பொதுமக்களுக்கு இறுக்கமான கருத்துக்களை திணிக்க தவறுகிறது. பள்ளி வாயல் நிருவாகம் கண்மூடிக்கொண்டு பாத்திருக்க முடியாது தமது பிரதேச அரசியல் தலைவர்களுடன் அழுத்தமான கருத்து பரிமாற்றலுக்கு தயக்கம் காட்டக்கூடாது.
தம்பி Faji அவர்களே! நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள் ஆனால் அதனைச் சொல்லாமல் முடித்தவிட்டீர்கள். கூட்டிக்கழிச்சிப் பார்த்தால் நீங்களும் அந்த பள்ளி நிர்வாகம் மாதிரித்தான் . எவர்களையோ சொல்ல வந்து அவர்களை சொல்லாமல் பூசி விடடீர்கள்.
ReplyDelete