ஏழை கிராமம் பாம்புகளுடன் உதவியுடன் நிமிர்ந்து நிற்கிறது
ஒரு காலத்தில் வறுமையில் வாடிய கிராமம். இப்போது பணக்கார கிராமமாக மாறி உள்ளது. சீனாவில் பாம்பு கிராமம் என்றே அழைக்கப்படும் அளவுக்கு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீன புத்தாண்டு கடந்த 10ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. சீனர்கள் புத்தாண்டை ஒரு வாரம் கொண்டாடுகின்றனர். ஆண்டுதோறும் ஒவ்வொரு விலங்குகளின் பெயரில் புத்தாண்டு அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பாம்புகளின் ஆண்டாக அறிவிக்கப்பட்ட பிறகு, பாம்புகளுக்கு மவுசு இன்னும் கூடிவிட்டது. கடைகளில் பாம்பு பொம்மைகள், தங்க நகைகள், ஆடைகள், அலங்காரங்கள் எல்லாவற்றிலும் பாம்புகள் இடம்பெற்றுள்ளன.
சீனாவின் எல்லா நகரிலும் பாம்புகள் படம் வைக்கப்பட்டுள்ளது. பாம்புகளை வைத்து பலர் வித்தைகள் செய்து காட்டி வருகின்றனர். பாம்புகளை வைத்து மாடல் அழகிகள் போஸ் கொடுத்து வருகின்றனர். இந்த பரபரப்புகளுக்கு இடையில், பாம்பு கிராமம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீனாவின் வடக்கு பகுதியில் உள்ளது ஜிசிகியோ கிராமம். 800க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கடந்த 1980களில் வறுமையில் வாடினர். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில், உணவுக்காகவும், சீன பாரம்பரிய மருந்துகளை தயாரிக்கவும் பாம்புகளை வளர்க்க தொடங்கினர். பெரும்பாலும் கிராமத்தில் எல்லோரும் தங்கள் வீடுகளில் பாம்புகளை வளர்க்க தொடங்கினர்.
மீன் வளர்ப்பில் இருந்து பாம்பு உற்பத்திக்கு இறங்கிய கிராம மக்கள், அதற்கு நல்ல பலனை பெற்றனர். இப்போது பாம்பு ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் களை கட்டி உள்ளது. நாங்கள் மிக ஏழையாக இருந்தோம். எதுவும் எங்கள் கையில் இல்லை. அப்போதுதான் பாம்பு வளர்க்க தொடங்கினோம். பெரும்பாலும் பாம்புகளை சீனர்கள் விரும்புவதில்லை. பலர் பாம்புகளை உண்பதும் இல்லை. ஆனால், பக்குவமாக பாம்பு உணவு, சூப் செய்தால் அதன் சுவையே தனி. இந்த ஆண்டு பாம்புகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டதால் விற்பனை அமோகமாக உள்ளது என்கின்றனர் கிராம மக்கள். பாம்பு டானிக், மது கூட தயாரித்து கிராம மக்கள் விற்கின்றனர். ஆண்களுக்கு தனி டானிக்கும் உண்டு.
Post a Comment