Header Ads



முசலி-மணற்குளம்,வெளிமலை மீள்குடியேற்ற கிராமத்தின் பாதைகளின் நிலமை



(முசலியான் எஸ்.எஸ்,எம்.வாஜித்)

இந்த நாட்டில் ஏற்பட்ட பயங்ககரவாத யுத்ததினால் மன்னார்-முசலி பிரதேசம் அதிகமான பாதிப்புக்களையும் இழப்புக்களையும் எதிர்கொண்ட பிரதேசமாக அன்றிலிருந்து இன்று வரைக்கும் காணப்படுகின்றது. 

முசலிப் பிரதேச செயளாளர் பிரிவுக்குட்பட்ட பூணைச்சிக்குளம் மற்றும் பண்டாரவெளி ஆகிய கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் உள்ள மணற்குளம்,இலந்தைக்குளம் மற்றும் வெளிமலை ஆகிய மீள் குடியேற்ற கிராமங்களில் உள்ள பிரதான வீதிகளும் உள்ளக வீதிகளும் இன்னும் செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் மேலும் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்களும், கர்ப்பிணி தாய்களும்,முதியோர்களும் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இந்த பிரதேசத்தில் உள்ளவர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு வெளி இடங்களில் இருந்து டிபர்களையும் இன்னும் பாரிய அளவிலான வாகனங்களை கொண்டு வருவதனால் பாதைகள் சிதைவடைவதாக மக்களும் தெரிவிக்கின்றனர்.

கடந்த முறை முசலிப் பிரதேசசபைக்கு பல இலச்சக்கணக்கான வருமானங்கள் கிடைக்கப் பெற்றுள்ள போதும் பிரதேச சபை செயளாலர் அந்த பணங்களை அரிப்பு வீதி,சவேரியார்புறம் ஆகிய வீதிகளை கொங்கிரீட் பாதைகளாக செப்பனிட்டுள்ளார்.யுத்தத்தினால் பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரதேசமாக முசலியில் இன்னும் எத்தனையோ வீதிகள் காணப்படுகின்றது. 

எனவே இந்த வீதிகளை புணர் நிர்மாணம் செய்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு முசலி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.





No comments

Powered by Blogger.