Header Ads



ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை மேயரின் கவனத்திற்கு



(எஸ். எச். எம். வாஜித்)

ஒரு நாட்டிற்கும் நாட்டின் தலைநகரத்திற்கும் அழகு சேர்ப்பிப்பதிலும் அபிவிருத்தியிலும் பிரதான பங்கு பகிப்பது உட்கட்டமைப்பு வசதியான பாதை ஆகும்.

கிராமங்கள் நகரங்களாகவும் மாநகரங்களாகவும் தரமுயரும் போது வீதிகளும் தரமுயர வேண்டியது மிகக்கட்டாயமானது. 

கொழும்பு - ஸ்ரீ ஜயவர்த்தனபுரக்கோட்டை மாநகர சபைக்குட்பட்ட நுகேகொடை பிரதான சந்தியிலிருந்து வலது புரமாகச்செல்லும் ஸ்டேன்லி திலகரட்டன மாவத்தை சரியான முறையில் செப்பனிடாமல் உள்ளதால் அவ்வீதியை பயன்படுத்துவோர் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கழிவு நீரைக்கொண்டு செல்லும் கால்வாய்கள் சரியான முறையில் மூடப்படாமல் காணப்படுவதனால் சிறிய மற்றும் பெரிய விபத்துக்களை பாதசாரிகள் முகம் கொடுக்கின்றார்கள்.

இப்பாதையில் சில பிரதியமைச்சர்களின் காரியலையங்களும் அரச திணைக்களங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எனவே இது சம்பந்தமாக உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பாதசாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



No comments

Powered by Blogger.