Header Ads



பிக்குகள் ஓதும் அல்குர்ஆன்...!



(அஸாத் எம். ஹனிபா)


விபரீதம்

நிகழ்ந்து விட்டதாய்

பழி போட்டு

விபரமாய்

விசாரணை செய்ய

சிவில் உடையில் இருந்த

அவர்கள்

என்னை அழைத்து

இல்லை

இழுத்துச் சென்றனர்


துப்பாக்கியின் நிழலில்

என்னை அமரச் செய்து

என் கையில்

பிரீத் நூலைக் கட்டினர்

அவர்களிடம்

விசிறிகளுக்குப் பதிலாக

அல் குர் ஆன் இருந்தது

தர்ம போதகர்கள்

அதனை விரித்து வைத்து

தம் விருப்பப்படி

அவர்களின் மொழியில்

அனுசாசனம் செய்தனர்

அங்கொன்றும்

இங்கொன்றுமாக

அதில் பிழை கண்டனர்

மொட்டைத்தலைக்கும்

முழங்காலுக்கும்

முடிச்சுப் போட்டு 
காரசாரமாய்

காரணம் கேட்டனர்

இனிமேல் வீடுகளில் தொழுதாலும்

கையேந்தி

பிரார்த்திக்கக் கூடாது

என்றனர்

பெண்கள்

முகத்தையும் தலையையும்

மூடாது

கட்டைப்பாவாடையில்

தலை விரி கோலமாய்

வருவதும்

ஆண்கள்

தாடி வளர்க்காது

முழுச்சவரம் செய்வதும்

நாட்டுப்பற்று என்றனர்

வாப்பாவை வஹாபி

சகோதரனை சலபி

உம்மாவை பௌத்த உபவாசக ஹாமினி

என்னை தீவிரவாதி

உலமாக்களை தேசத்துரோகிகள்

எனக்கூறி வெற்றுத்தாளில்

கையொப்பம் இடச் செய்தனர்

கந்தசாமி அண்ணனை

உயிருடன் புதைத்த

கருணாரத்தன ஐயா

இந்த கலீல் தம்பியை

ஒரு தும்பி என

நினைத்தா

அங்கங்களை அன்னதானம்

செய்யப் பார்க்கிறார் ?

காரிருளில்

என்

கண்களைக் கட்டி

மாட்டுத் தொழுவத்தில்

இறக்கி விட்டுச் சென்றனர்

ஆனால்

நாம் உதிரத்திலிருந்து எழுவோம்

உயர்வாய் உலகை வெல்வோம் !


**********************

3 comments:

  1. Devaiyatra pathaddatthai uruvaakka naame munnitpom pol

    ReplyDelete
  2. இதயங்களில் காரிருள்.எமக்குக் கிடைக்குமா இறயருள்.
    மஸ்ஜிதுக்குள் பதவிப்போட்டி.உலமாக்களை உருவாக்கும் கல்லூரிகளுக்குள்ளும் அப்போட்டி.இவர்களுக்குள்ளும் கல்விச் செருக்குப்போட்டி.அயலவர்களுக்குள் பணப்போட்டி.நானா தம்பிக்குள் சொத்துப்போட்டி.சிறு பான்மயினரான எமக்குள் பிரதேசப்போட்டி. இப்படி எம் சமூகம் உளுத்துப்போனால் எங்ஙனம் கிடைக்கும் இறயருள் எமக்கு.
    ஈமானியப்பல்ம்.இதய சுத்தி.அனுமதிக்கப்பட்ட வணக்கம்.புத்திகூர்மை .தூர நோக்கு.பிரார்த்தனை.இவய்கள்தான் எமது ஆயுதம்.
    புற்ப்படுவோம் பேதம் மறந்து.பெருமை துறந்து.பகமை கழய்ந்து.நாம் அபாபீலியப்பரம்பரை .நெயில் நதிக்கு முடம் வரைந்த பரம்பரை.திஜ்லாவில் (நதியில்)நடைப்பவணி செய்த பரம்பரை.சீர் திருந்தி ஒன்று பட்டால் எமக்கே வெற்றி.இது இறை வாக்கு.

    ReplyDelete
  3. Alahmdullillah.........Best

    ReplyDelete

Powered by Blogger.