கல்எலிய முஸ்லிம் மகளிர் அரபுக்கல்லூரி மாணவிகளின் உடல்நிலை முன்னேற்றம்
(வரகாபொலையிலிருந்து அபூ ஸஹ்லா)
ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கல-;எலிய முஸ்லிம் மகளிர் அரபுக்கல்லூரி மாணவிகளின் உடல்நிலை தேறியுள்ளதாக, கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு உணவு உட்கொண்டதன் பின்னர், வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்ட கல்லூரியின் 52 மாணவிகள், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி நிர்வாகம், மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக, விசேட மருத்துவ நிபுணர்களின் உதவியுடன், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு, சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளும் பூரண குணமடைந்து, தற்போது கல்லூரி விடுதிகளுக்கு திரும்பியுள்ளதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெற்றோர், பீதியடைய தேவையில்லையென, நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.
masha allah
ReplyDeleteok
ReplyDeleteKARANAM ANNA
ReplyDelete