பொதுபல சேனா தலைமையகத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் (படங்கள)
(இக்பால் அலி)
கொழும்பு சுவர்ன ஜயந்தி மந்திரயவில் அமைந்துள்ள பொது பலசேனா தலைமையகத்திற்கு திடீரென்று விஜயம் செய்த குருணாகல் மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ.ல.சு. கட்சியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளருமான அப்துல் சத்தார் உட்பட்ட குழுவினர் பொது பலசேனா இயக்கத்தின் தலைவர் தலைவர் கிரம விமலஜோதி தேரர், செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இணைப்பாளர் திலன்த கமகே ஆகியோரை சந்தித்ததுடன் இலங்கையில் இன்று முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள முக்கியமான பிரச்சனைகள் சம்பந்தமாக மிகவும் சுமூகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தமது இயக்கம் எந்த வகையிலும் இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்பதில் உறுதியாக இருந்த பொது பலசேனா அமைப்பினர் பல சம்பவங்களில் முஸ்லிம்களுக்குஎழுந்த பிரச்சணைகளில் தாம் முன்னின்று இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்து இந்நாட்டு மக்களின் சக வாழ்வு சம்பந்தமாக பொது நிலமையில் இருந்ததை எடுத்துக்கூறினர்.
சுமார் இரண்டு மணத்தியாளஙகள் இடம்பெற்ற இந்த சந்திப்பு சமபந்தமாக அப்துல் சத்தார்கருத்துத்தெரிவிக்கையில் இன்று இலங்கை முஸ்லிம் மக்கள் வாழும் அச்சமான நிலையிலிருந்து முஸ்லிம்களின் சுமூக நிலைக்கு கொண்டு வரலாம் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு இரண்டு சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையையும் சகவாழ்வையும் மீன்டும் உருவாக்குவதற்கு இந்த சந்திப்பு வழி வகுத்ததாகவும் தொடர்ந்தும் இது சம்பந்தமான முயற்சிகளில் தான் மும்மரமாக இருப்பதாகத்தெரிவித்தார்.
சார் இவர்கள் ஏவிவிட்ட வெறும் அம்புகள் தான்... இவர்களை ஏவி விட்டவர்கள் உங்களுது மரியாதைக்குரிய தலைவர் ராஜபக்ச அன் கம்பனி.
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்தை இப்படி அச்சுறுத்தி அவமானப்பட்டுத்தும் இந்த ராஜபக்ச அன் கம்பனியை முஸ்லிம்கள் நிற்சயமாக தண்டிப்பார்கள்
இது பலரும் முன்வந்து செய்ய வேண்டிய வேலை
ReplyDeleteஎனவே பொறுப்பானவர்கள் அனைவரும்
இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது
காலத்தின் தேவையாகும்.
apriciate your service
ReplyDeleteநன்றி திரு.அப்துல் சத்தார் அவர்களே, உங்களது சேவை மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கல்.
ReplyDeleteஇதில் முஸ்லிம் தலைவர்கள் கவனிக்க வேண்டியவைகள் பல உள்ளன. இவர்களை பின்னால் நின்று ஆட்டி விடும் சக்திகள் தான் முக்கியம். இந்த விடயத்தில் ஜமீயதுல்உலமாவின் அணுகு முறையை பாராட்ட வேண்டும். இந்தக் கூட்டத்தை (BBS)அலட்சியம் செய்வதே இவர்களுக்குப் பின்னால் இவர்களை வைத்து காய் நகர்த்தும் சக்திகளுக்கு கொடுக்கும் மரண அடி. அதற்காக வாயை மூடிக் கொண்டு இருக்கச் சொல்ல வில்லை. இவர்கள் பின்னால் உள்ளவர்கள் பலம் வாய்ந்தவர்கள். சும்மா வோட்டுக்கு பயப்படும் உள்ளூர் அரசியல்வாதிகளை (நுனிப்புல் மேயும் "குருவி" போன்றவர்களைப் போல்) நம் சமுதாயம் காட்டி நின்றால் எல்லாம் பிழைத்துவிடும். விடயம் புரிந்தால் அதற்கேற்றால் போல் கையாளுங்கள். தெரியாவிட்டால் செய்பவர்களை செய்ய விட்டுவிட்டு வேடிக்கை மட்டும் பாருங்கள். நீங்கள் அனாவசியமாக வாய் முந்தினால், விமர்சிப்பில் எல்லை மீறினால் நமது சமூகத்துக்காக குரல் கொடுக்கும் எத்தனையோ பௌத்த சகோதரர்களின் உதவியை இழக்க நேரிடும். ஏனென்றால் இவ்விடயம் முள்ளில் விழுந்த சேலை போன்ற விடயம். பின்னால் இருப்பவர்கள் உலகம் முழுதும் இனக் கலவரங்களை தூண்டி விடுவதில் கை தேர்ந்தவர்களும், நம்மில் உள்ள உலக மோகம் பிடித்த சில துரோகிகளும். தங்கள் நலனுக்காக சமூகத்தை ஈடு வைக்கும் இவ்வீனர்கள், தாங்கள் பழி வாங்க நினைப்பவர்களை பழிவாங்கவும், ஹலால் சான்றிதழை அரச மயமாக்குவதன் மூலம் அதற்குள் கையடிக்க கனவாய் காண்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு அரசிலும்,அரசியலிலும்,ஊடகங்களிலும் செல்வாக்கு அதிகம். நீங்கள் இந்த BBS தேரர்களிடம் சென்று கேளுங்கள் "நீங்கள் கூறும் பாரம்பரிய முஸ்லிம்கள் யார்? " என்று. அப்பொழுது புரியும் இங்கு பல மர்மங்கள் உள்ளனவென்று.. நம்முள் உள்ள கொள்கை வேறுபாடுகளை மறந்து இப்பொதுப் பிரச்சினையில் ஒன்று படுவோம். நமது பொது எதிரிகளை இலகுவாக இனம் கண்டு கொள்ளலாம்.
ReplyDelete