யாழ்ப்பாணத்தில் பத்திரிகை விநியோகத்தர் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாண தினக்குரல் பத்திரிகை விநியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். அத்துடன் அவர் விநியோகிப்பதற்கான எடுத்துச்சென்ற பத்திரிகைகள் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மீது கம்பியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ். புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு அருகாமையில் இன்று 07-02-2013 காலை 4.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் சிவகுமார் (வயது 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரும்பு கம்பிகளினாலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து யாழ். தினக்குரல் பிரதம ஆசிரியர் விநாயகம்பிள்ளை அட்புதானந்தன் கருத்து தெரிவிக்கையில்,
'யாழ்.பத்திரிகைகளுக்கு தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் உதயன் பத்திரிகைக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தற்போது யாழ்.தினக்குரல், இனிவரும் காலங்களில் எந்தெந்த பத்திரிகைகளுக்கு தாக்குதல் மேற்கொள்ள உள்ளார்கள் என்று தெரியவில்லை.
இவ்வாறான தாக்குதல்களை யார் மேற்கொள்கின்றார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறே தெரிந்தாலும்கூட வெளியில் கூற முடியாத நிலை காணப்படுகின்றது.
ஜனநாயக நாட்டில் ஊடகங்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதானது நல்ல விடயம் அல்ல.
யாழில் சுமூகமான நிலை காணப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகிறது. இது துரதிஷ்டாமான நிலையாகும்' என தெரிவித்தார்.
Post a Comment