முஸ்லிம்கள் பொறுமை காக்கின்றனர் - கண்டுபிடித்தார் விமல்வீரவன்ச
(அஸ்ரப். ஏ. சமத்)
இலங்கையில் வாழும் சிங்கள முஸ்லீம் மக்களிடையே இனமுறுகல் ஏற்படுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார். ஆனால் இலங்கையில் அவ்வாறனதொரு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நவநீதம் பிள்ளைக்கு பின்னால் உள்ளவர்கள் சிங்கள முஸ்லீம் இனமுறுகள் பிரச்சினையை இலங்கையில் திடிரென ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கின்றார்கள். இலங்கையில் வாழும் மற்றொரு சிறுபாண்மையினமான முஸ்லீகளுக்கும் இந்த நாட்டில் பிரச்சினை இருக்கின்றது. அவர்களையும் தற்போதைய அரசு வாழ முடியாமல் தடுக்கின்றது. எனவும் இவ்வாறனதொரு பிரச்சினை ஏற்படும் அதனை உலகில் உள்ள முஸ்லீம் நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் சிலர் சர்ந்தர்ப்பம் தேடுகின்றனர். மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள இலக்கைக்கெதிரான ஜக்கிய நாடுகள் மணித உரிமை வாக்கெடுப்பில் முஸ்லிம் நாடுகளை எதிராக வாக்கெடுப்பில் கவர்ந்து கொள்வதற்கே நவநீதம்பிள்ளை மற்றும் சில இலங்கை விரோத சக்திகளின் நாடகமாகும்.
இவ்வாறானதொரு பிரச்சினையை ஏற்படுத்தவே இலங்கையில் உள்ள சிறு குழுக்களுக்களை மறைமுகமாக சிலர் பாவித்து வருகின்றனர். இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு விரோத சக்திகளின் இந் நாடகத்தினை இந்த நாட்டின் கீழ் மட்டத்தில் இருக்கும் சிறு குழுவினர்களுக்கு விளங்காமால் உள்ளது. சிறு பிரச்சினைகளை அநாவசியமானதொரு மாபெரும் பிரச்சினையாக மாற்ற முயலுகின்றனர் சிங்கள முஸ்லீம்களிடையே இனமுறுகளை ஏற்படுத்தவே முயலுகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் பொறுமை காத்து வருகின்றனர். என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேற்கண்டவாறு கொழும்பு திம்பிரிகஸ்சியாவில்; 52 வருடங்கள் பழமைவாய்ந்த தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை 170 மில்லியன் ருபா செலவில் நவீனமயப்படுத்தி மக்களிடம் ஒப்படைக்கும் வைபவத்திலேயே அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.
அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்ந்து உரையாற்றுகையில் -திம்பிரிகாசாய பொகலவத்தை வீடமைப்புத் திட்டம் 1960ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் 80 வீடுகள் உள்ளன. 1973ஆம் ஆண்டு 41 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இருந்தன. 121 வீடுகள் 52 வருடங்களுக்குப் பிறகு 170மில்லியன் ருபா நிதியில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு நவீனமயப்படுத்தியுள்ளது. இத் திட்டத்தினால் இவ் வீடமைப்புத் திட்டத்தில் வாழும் மக்கள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆமாண்டா நாங்க பொறுமையாக இருப்பதால்தாண்டா நீ இன்று இதை கண்டுபிடிச்சி பெரிய விஞ்ஞானி ஆகிவிட்டாய்.
ReplyDeleteகூட இருக்கும் முசம்மில் சொல்லித் தந்தானா ?
Dear thothu Vamsa,
ReplyDeleteif it is so, why government did not take any action against this group, they done many picketing in all area. Government still watching, same action done by muslim or Tamils now how many person will be in jail. where is your sense dear thothu Vamsa
ஜால்ரா அடிப்பதில் இவர் தேர்ந்தவர் தான். இவரை எனக்கு பிடிக்காதும் தான். ஆனால் எனக்குத் தெரிந்த வரை BBS பிரச்சினையில் ஆரம்பத்தில் இருந்து முஸ்லிம்கள் பக்கம் இருக்கிறார். நாம் விமர்சிப்பில் அவர்கள் போல் நிதானம் இழக்கக் கூடாது. இவர் அரசாங்கத்தில் இருப்பதற்காக ஒரு துரும்பையும் ஆட்ட முடியாது. மஹிந்த வம்சம் சொல்லிக்கலாம். அவ்வளவு தான். நம்ம அமைச்சர்கள், MP ...களுடன் ஒப்பிட்டால் இவர் கொஞ்சம் அதிகமாக நம் பக்கம் பேசியுள்ளார்.... அவர்களுக்கென்ன "புது மணமகன்" போல எந்தக் கவலையும் இல்லா உறக்கம்.
ReplyDeletemuzammil solla vandiyathai vansa sollukirar vansa solla vendiyathai muzammil sollukirar!rempa nalla arasiyal seyhirihalappa!
ReplyDelete