அணுகுண்டை சுமந்துசெல்லும் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்தது
அணுகுண்டை சுமந்து செல்லும் திறன் பெற்ற ஏவுகணையை, பாகிஸ்தான், நேற்று சோதனை செய்தது.இந்தியாவுக்கு போட்டியாக, பாகிஸ்தான், பலதரப்பட்ட ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. பாகிஸ்தான் தயாரிக்கும் பெரும்பாலான ஏவுகணைகள், இந்தியாவை இலக்காக வைத்து தான் பரிசோதிக்கப்படுகின்றன.அடையாளம் தெரியாத இடத்தில், "ஹத்ப்-9' அல்லது நசர்' எனப்படும், 60 கி.மீ.,தூரம் சென்று தாக்கும், ஏவுகணை நேற்று, சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை, அணுகுண்டை சுமந்து செல்லும் திறன் பெற்றது.
Post a Comment