ஹஜ் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாட்டு அரசு அறிவிப்பு
இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்களை எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது இதற்கான விண்ணப்பத்தை www. hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மனுதாரர்கள் வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம். எனவே கடந்த காலங்களில் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளாத நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இது தொடர்பான விபரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment