காற்று மாசடைந்துள்ள நகரங்களில் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை குறைவு..!
காற்று மாசடைந்துள்ள நகரங்களில் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை குறைவாக இருப்பதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த, ஒன்பது நாடுகளில் உள்ள, 14 நகரங்களில் பிறந்த குழந்தைகளிடம், சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காற்று மாசுபட்ட நகரங்களில், பிறந்த குழந்தைகளின் எடை, 2.5 கிலோ குறைவாக இருப்பது கண்டறியபட்டது.
நகரங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் புகையை சுவாசிக்க நேர்வதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, எதிர்காலத்தில் நீண்டகால நோய்கள் உண்டாகின்றன. இந்த ஆய்வின் தலைவரான சான்பிரான்சிஸ் கோவைச் சேர்ந்த பேராசிரியர் ட்ரேசி வுட்ரப், இது குறித்து குறிப்பிடுகையில், ""நாம் சுவாசிக்கும் காற்றில், முடியை விட மிகவும் மெல்லிய தூசுகள் கலந்துள்ளன. இவை, காற்று மாசுபாட்டால் உருவானவை. அமெரிக்காவில் காற்று மாசுபாட்டை குறைக்க, செலவிடப்பட்ட தொகை மிகவும் அதிகம். இது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடம்,'' என்றார்.
Post a Comment