Header Ads



பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிய கயவர்கள்


3 பெண் பிள்ளைகள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து கிணற்றில் வீசிய குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

பிப்ரவரி 14ம் தேதி பள்ளிக்குச் சென்ற 3 சகோதரிகளும் காணாமல் போனதை அடுத்து 2 நாட்களுக்குப் பிறகு கிணறு ஒன்றில் மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மூவரும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. கிராமத்தினரின் போராட்டத்துக்குப் பிறகே இது குறித்த வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், சம்பவம் நடந்து ஒரு வார காலம் ஆன பிறகும், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

எங்களுக்கு எவ்வித இழப்பீடும் வேண்டாம். நீதி மட்டுமே வேண்டும். எங்கள் குழந்தைகளைக் கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று குழந்தைகளை இழந்த தாயும், தாத்தாவும் கதறுகின்றனர்.

1 comment:

Powered by Blogger.