'நாட்டின் இன்றைய நிலைமையில் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும்'
நாட்டின் இன்றய நிலைமையில் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என அகில இலங்கை உலமா சபையின் சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் தலைவர் மௌலவி அஷ்ஷேஹ் என்.எம்.அப்துல் முஜிப் (நளீமி) தெரிவித்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக பல்லின சமூகங்கள் ஒன்றாக இணைந்து ஒரே குடும்பமாக வாழ்ந்து வரும் எமது நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தை நோக்கி குறித்த ஓர் அமைப்பினால்; மிகவும் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் யாவரும் அறிந்தது. கடந்த பெப்ரவரி 4ம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற 65வது சுதந்திர தின நிகழ்வுகளின் போது கௌரவ ஜனாதிபதி அவர்களின் உரை கூட இவ்வி;டயத்தை கருத்தில் கொண்டு இடம்பெற்றுள்ளது. அவ்வுரையில் ' ...மக்கள் ஒன்றாக வாழும்போது இன,மத பேதங்கள் எதுவுமில்லை. இந்த நாட்டில் எல்லோரும் சம உரிமையோடு வாழ்வதுதான் நல்ல தீர்வு. இனபேதம் போலவே மதபேதமும் நாட்டில் அழிவை உருவாக்கும். யாராவது இந்த பேதம் உருவாக்கினால் அது நாட்டில் பிரிவினையை உருவாக்கும். நாம் அதற்கு இடம் கொடுக்கமாட்டோம். இலங்கை மக்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களே.. உங்களுக்கான கலாச்சாரம் உண்டு...' என ஜனாதிபதி அவர்கள் குறி;ப்பிட்டார்கள்.
இந்த நாடு சுதந்திரமடைந்து 65 வருடங்தளைக் கடந்துள்ள இந்நிலையில் ஜனாதிபதி அவர்களின் இந்த உரை முக்கியம் பெறுகிறது. அனைத்து சமூகங்களுக்குமான சம உரிமை, கலாசார தனித்துவம், இன ஒற்றுமை என்பவற்றை வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி அவர்கள,; அடுத்த மதத்தினருக்கிடையில் பேதங்களை உருவாக்குபவர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த உரைக்குப் பின்னரும் குறித்த அந்த அமைப்பு பகிரங்கமாக மேற்கொள்ளும் திட்டமிட்ட செயல்களினால் முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் மக்களும் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள்.
ஜனாதிபதி அவர்கள் அண்மையில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக பாராளுமன்ற உபகுழு ஒன்றினை நியமித்துள்ளதை அறிய முடிகிறது. இக்குழுவிற்கு உரிய தகவல்களையும், ஆதாரங்களையும் சமர்ப்பிப்பது இக்குழுவிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள், பொறுப்பு வாய்ந்த சமூகத்தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரதும் கடமையாதும். இந்நடவடிக்கையானது ஜனாதிபதி அவர்கள் முஸ்லிம் சமூகம் தொடர்பான சரியான புரிதலை ஏற்படுத்துவதுடன் எமது சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களைக் களைவதற்கும் வழிவகுக்கும் என எமது சபை நம்புகின்றது.
தலைவர்,
அகில இலங்கை உலமா சபை,
சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளை.
Post a Comment