Header Ads



சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்


மன்னார் முசலியைப் பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்றை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட குலாம் காதர் முகம்மது அஸ்ஹர் என்பவர் அண்மையில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி வி. இராமக்கமலன் முன்னிலையில் தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 

இவர் தனது பாடசாலைக் கல்வியை மன்/ முசலி மகா வித்தியாலயத்திலும் பட்டக்கல்வியை யாழ் பல்கலைக்கழகத்திலும், பட்டப்பின் படிப்புக்கல்வியை திறந்த பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார். வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் பல கட்டுரைகளையும், கவிதைகளையும் தேசிய பத்திரிகைகளிலும் இணையங்களிலும் எழுதி வருகிறார். 

மனித வள அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரும், மெசிடோ நிறுவனப் பணிப்பாளரும், சிறந்த மேடைப் பேச்சாளருமாகிய இவர், புத்தளம் வை.எம்.எம்.ஏ நகரில் வதியும் குலாம் காதர் ஆயிஷா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும் ஆவார். இவரின் சேவை தொடர வாழ்த்துகிறோம்.

No comments

Powered by Blogger.