பொதுபல சேனாக்கு எதிராக முஸ்லிம்கள் மௌனம் கலைதல் வேண்டும் - இனாமுல்லாஹ்
(Inamullah Masihudeen)
இஸ்லாமிய வங்கிகள் , முஸ்லிம் தனியார் சட்டங்கள் , காதி நீதிமன்றங்கள் என முஸ்லிம்களின் அடுத்த உரிமைகளிலும் தலையிடுகிறது பொதுபல சேனா, முஸ்லிம்கள் இனியும் மௌனமாய் பார்த்துக் கொண்டிறாது அடுத்த வெள்ளியன்று நாடுமுழுவதும் முழுமையான கட்டுக் கோப்புடன் தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பை நாட்டிற்கும் உலகிற்கும் தெரிவிக்க முன்வர வேண்டும்.
முஸ்லிம்களின் தொடர்ந்தேர்சியிலான மௌனமும் விட்டுக் கொடுப்புக்களும் பின்வாங்கல்களாக அல்லது கோழைத் தனமாக எவராலும் கருதப் படக் கூடாது. முஸ்லிம்கள் விகித சிறுபான்மை என்பது எதோ உண்மைதான், அனால் இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் நிலவும் சமாதான சகவாழ்விற்கு சவால் விடும் இந்த மதவாத இனவாத தீவிர வாதிகள் நாட்டில் தசம் ஐந்து வீதமும் இல்லை அவர்களுக்கு நாடு முழுவதும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் ஈடு பட முடியுமெனில் நாம் ஏன் மௌனமாக இருக்க வேண்டும்.
அவர்களுக்கு அனுமதி பாதுகாப்பு வழங்கும் அரசு முஸ்லிம்களுக்கும் அனுமதியும் வழங்கும் என நம்புகின்றேன். முஸ்லிம் அரசியல் வாதிகள் சகலரும் களத்தில் இறங்க வேண்டும் இன்றேல் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முஸ்லிம்கள் ஜனநாயாக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்து தமது எதிர்ப்புக்களை தெரிவிக்க முன்வரும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ,மக்கள் விடுதலை முன்னணி , மக்கள் முற்போக்கு முன்னணி உற்பட ஆளும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பல தேசிய அரசியல் சக்திகளும் தமது ஆதரவை தெரிவிக்க வுள்ளதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தனர்.
பொது பல சேனாவின் அரசியலுக்கு அரசியல் ரீதியில் தேசிய சக்திகளுடன் சேர்ந்தே முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டும், அவ்வாறு அரசியல் கலப்பை விரும்பாத விடத்து முதற்கட்டமாக முஸ்லிம்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அரசியல் வேறுபாடுகள் மறந்து தமது எதிர்ப்பை தெரிவிக்க முன்வர வேண்டும்.
முஸ்லிம்களுக்கு விடுக்கப் படும் சவால்கள் பிற நாட்டு சதிகாரர்களின் பின் புலத்தில் முழு தேசத்தின் இறமைக்கும் பாதுகாப்பிற்கும் சமாதான சக வாழ்விற்கும் விடுக்கப் படும் அச்சுறுத்தல்கள் ஆகையால் தேசிய கொடிகளை கையில் ஏந்தியே முஸ்லிம்கள் தமத்கு ஒட்டு மொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும்.
ReplyDeleteஇந்த நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்க முடியாது , எந்தவொரு சமூகத்தின் மீதான ஆதிபத்தியத்தையும் சட்டத்தையும் எந்த சக்தியும் கையிலேந்தி காட்டு தர்பார் நடாத்த முடியாது, அதிகாரத்திலுள்ள அரசும் ஜனாதிபதியவர்களும் பங்காளி முஸ்லிம் அமைச்சர் ப[ஆராளுமன்ர உறுப்பினர்களும் முஸ்லிம்களின் இந்த ஜனநாயக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை நல்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
முஸ்லிம்கள் ஒருபோதும் தமது பிரச்சனைகளை இந்த நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்றதில்லை, வன்முறைகளை ஒருபோதும் நாடியதுமில்லை, அடுத்த சமூகங்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாது இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும் சமாதான் சக வாழ்விற்கும் அமைதி சமாதானத்திற்கும், பொருளாதார சுபீட்சத்திற்கும் பங்களிப்புச் செய்துள்ளனர்.
தேசப்பற்றுள்ள முஸ்லிம்கள் சகலரும் எங்கள் சொந்த நாட்டின் தேசிய கொடியுடனேயே தீய சக்திகளுக்கெதிரான தமது பலத்த எதிர்ப்பை தெரிவிக்க களத்தில் இறங்க வேண்டும்.
இது எனது அபிப்பிராயமாகும், முஸ்லிம்களின் கூட்டுத் தலைமை அவசரமாக ஒன்று கூடி மிகவும் கட்டுக் கோப்பான இஸ்லாமிய வரம்புகளை மீறாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
Insha allah....
ReplyDeleteGood idea
ReplyDeleteசகோ,இனாமுல்லா காண் அவர்களின் கருத்தின்படி ஆர்பாட்டங்கள் ,ஊர்வலங்கள் மூலம் சர்வதேசிய மயப்படுத்தலுடன்,இலங்கையி
ReplyDeleteன் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உனர்வுகளையும் பிரதிபலிக்கு முகமாக ஒரு பிரகடணம் வெளியிடப்பட வேண்டும்.அந்த பிரகடன
த்தில்சாம.பேத,தாண,தண்டம் என்ற அணைத்து அஸ்திரங்களையும்
பயன்படுத்தி சமரசத்தின் சக வாழ்வின், இலக்கைஅடையமுயற்சிக்க
வேண்டும்.அது சுகததாச ஸ்டேடியத்தில் ஆயிரக் கணக்கான உலமா க்கள்,புத்திஜீவிகள்,மத்தியில் நடை பெற வேண்டும்.
இன்ஷாஹ அல்லா, இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒன்ருகூடவேன்டும். மேலும் வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் தமது சமுதாய இணைங்களின் கூடாக தத்தமது கருத்துக்களை கொடுக்க முன்வரவேன்டும்... நன்றி
ReplyDeleteபாராட்டுக்கள், சகோதர் இனாமுள்ளாஹ்.
ReplyDeleteஇதுவரையில் யாருமே இக் கருத்தை முன் மொழிய பயந்து முன்வராத போது நீங்கள் துனிசலுடன் இக்கருத்தை முன்வைத்ததுக்கு.
சமிபகாலமாக எனது என்னத்திலும் இக்கருத்தே ஆட்கொண்டு இருந்தது.
இதை ஒலுங்காக நெறிபடுத்தி சகல ஊடகங்களுக்கும் அறிய படுத்துதல் நன்று. குறிப்பாக..அல் ஜெஸீரா அல் அரபியா போன்ர ஊடகங்கலை தொடர்புகொண்டு இவ் நிலமையை வெளி உலகுக்கு தெரியப்படுத்துதல் நன்று.
இனங்கலுக்கிடையில் குரோதத்தை விதைத்து நாட்டில் அமைதி இன்மையை ஏற்படுதும் பொது பல சேன என்ர அமைப்பை தடைசெய்யச் சொல்லி பிரதேச செயலாளர்கள் ஊடாக ஜானாதிபதிக்கு மகஜர்களும் கையலிக்கலாம். அமைதியான முரையில் எமது எதிர்பை நாடுபூராகவும் வெளிப்படுத்தினால் அரசுக்கு கொஞ்சம் தலையிடியைக் கொடுக்களாம்.
குறிப்பு..:முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் கலந்து கொல்ல மாட்டார்கள், இதை அவர்களிடம் எதிர் பார்க்க முடியது. ( பதவியை இலக்க இவர்கள் தயர் இல்லை, இன்னும் அரை அமைச்சு பதவி கேட்டு சண்டைகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்ரது).
insha allah.
ReplyDeleteI am redy.
We should have protest before government ask ACJU to stop Halal certification procedures. Bodu Balal Sena has rejected ACJU's recent propoasl which request government to take over halal certification system. please read following news.
ReplyDeletehttp://www.dailymirror.lk/news/26046-bodu-bala-sena-rejects-acju-proposal.html
இப்பவாவது ஒரு உருப்படியான ஐடியா வுடன் ஒரு சகோதரன் முன்வந்திருக்கிறார் . மாஷா அல்லாஹ். இவருக்கு எத்தனை பேர் ஒத்துழைக்கப் போகிறார்கள் என்று தான் பிரச்சனை. eaனெனில். அரசின் கைப்பொம்மைகளாக செயற்படும் நம்ம முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் ஊர்களில் இந்த ஆர்ப்பாட்டம் செய்ய முன் வருவார்களா. பள்ளிவாசல் நிர்வாக சபையை கைக்குள் வைத்தக்கொண்டு கட்டயப்படுத்தி விடுவார்கள்.
ReplyDeleteசகோதரர் இனாமுல்லாஹ்வின் கருத்து மிகவும் வரவேற்புக்குரியதாகும் ..
ReplyDelete