மியன்மார் முஸ்லிம்களை காப்பாற்றிய இலங்கை கடற்படைக்கு ஐ.நா. சபை பாராட்டு
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் வைத்து மியன்மாரைச் சேHந்த 32 அகதிகளை மீட்டமைக்காக இலங்கை கடற்படையினருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை பராட்டுதல் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, அதன் ஆணையாள ஆண்ட்ரேஜ் மெகிக் இந்த வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அகதிகளுக்கான மரணக்கிடங்காக இந்து சமுத்திரம் மாறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்
.
ஆசிய நாடுகளிலேயே அதிகமான அகதிகள் இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் கடல்மாHக்கமாக வேறு நாடுகளுக்கு செல்லும் போது, இந்து சமுத்திரத்தின் பல்வேறு பகுதிகளில் வைத்து படகு கவிழந்தும் உணவின்றியூம் உயிரிழப்பதாக அவர் தெரிவித்துள்ளார். sfm
Post a Comment