ஹலால் குறித்த அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் விரைவில் - அமைச்சர் வாசு
ஹலால் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு, தமது பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஹலால் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கட்ட அமைச்சரவை உப குழு நேற்று கூடியது.
இந்த நிலையில், இந்த குழு தமது பரிந்துரைகளை விரைவில் ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயகார குறிப்பிட்டார்.
இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமய ரீதியான முறுகலை தவிர்க்கும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் இந்த அமைச்சரவை உப குழு கடந்த தினத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment