Header Ads



இலங்கைக்கு எதிராக களமிறங்காதது ஏன்..? பீ.ஜே. விளக்கம்


விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் (PJ) அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று ஜெய்னுலாப்தீன் தெரிவித்தார்.

இலங்கை அரசிற்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கவில்லை என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என எல்லா அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்மட்டும் இதற்காக எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

மனித நேயத்தைப் பற்றிப் பேசக் கூடிய இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் இதுபோன்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடியவர்கள். இவர்கள் போராடும் போது இலங்கை அரசு செயல்பட்டதைப் போன்றுதான் இவர்களின் செயல்பாடுகளும் இருந்தன.

விடுதலைப் புலிகள் போருக்கு வந்த சிங்கள ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்லவில்லை. அப்பாவி மக்களையும் தான் சுட்டுக் கொண்டார்கள்.

விடுதலைப் புலிகளும் சிங்கள அரசு செய்ததைப் போன்றே குற்றங்களைச் செய்தார்கள் என்பதை தமிழ் சமுதாய மக்களுக்கு இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழக அரசியல்வாதிகள்.

இருவரும் ஒரே குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கும் போது கண்டிக்க வேண்டுமானால் ராஜபக்சேவையும், விடுதலைப் புலிகளையும் கண்டிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நல்லவர்களாகவும், ராஜபக்சே அரசை கண்டனத்திற்குறியதாகவும் காட்டுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்குமாகாணத்தில் உள்ள யாழ்ப்பானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான இஸ்லாமியர்கள் பெரிய தொழிலதிபர்களாக இருந்தார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் ஒரு இஸ்லாமியர்கள் கூட இருக்கக் கூடாது என 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள  அனைத்து இஸ்லாமியர்களையும் வீடு, வாசல், சொத்துக்களை விட்டு விரட்டியடித்தனர். அவ்வாறு அந்த இடத்தை விட்டு வெளியேராதவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பார்க்காமல் சுட்டுக் கொன்றனர்.

விரட்டப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் போன்ற பகுதிகளில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு அகதிகளாக சொந்த நாட்டிலேயே வாழ்ந்தனர். கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.

விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணம் வரை ஊடுறுவிச் சென்று இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காத்தான்குடிக்குச் சென்றனர். அங்குள்ள பள்ளிவாசலில் சுபுஹு (விடிகாலைத்) தொழுகையில் ஈடுபட்டிருந்த குழந்தைகள், முதியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக் கொன்றவர்கள்தான் இந்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள். அந்தப் பள்ளிவாசல்களில் இரத்தக்கரை இன்றளவும் உள்ளது. அங்கு பிரபாகரனின் மகனை விட பச்சிளம் குழந்தைகள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டனர். யுத்தம் செய்ய வந்தவர்களைப் போல தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், கிழக்குமாகாணத்தில் உள்ள செல்வந்தர்களைக் கடத்திச் சென்று மிரட்டி பல கோடி ரூபாய்களை அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பறித்தனர். புலனிருவை என்ற ஊரிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர்.

ராஜபக்சே செய்ததை விட அதிகமான அய்யோக்கியத்தனத்தை இந்த விடுதலைப் புலிகளும் செய்துள்ளனர். தமிழர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் செய்த தவறுகளை மறைத்து, பயந்து கொண்டு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது போன்ற பயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குக் கிடையாது. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதனைத் தான் நாங்கள் கவனத்தில் கொள்வோம். அனைவரும் சேர்ந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாகப் பேசினாலும் நாம் அவ்வாறு பேசமாட்டோம். இதன் காரணத்திற்குத்தான் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழித்த பின்னர்தான் அதிகமான மக்கள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காகவே அரசியல் கட்சிகள் இதனை கையிலெடுத்திருக்கின்றன.

ராஜபக்சே அரசு செய்த ஒன்றை உலகத்திலேயே ராஜபக்சே அரசு மட்டும் தான் செய்துள்ளதா? உதாரணமாக உலகறிய ஒரே மாதிரியான தவறான செயலை ஆயிரம் நபர்கள் செய்திருக்கும் போது தொள்ளாயிரத்து தொன்னுத்தொன்பது நபர்களை விட்டுவிட்டு ஒருவனுக்கு மட்டும் தண்டணை கொடுப்பது நியாயமா?அயோக்கியத்தனமா?

ராஜபக்சே அரசு செய்ததைப் போல எந்த நாட்டில் செய்யவில்லை. இந்தியாவில் காஷ்மீர், ஒரிஸா போன்ற நாடுகளில் செய்யவில்லையா? வீரப்பனை பிடிக்கப் போகின்றோம் என்று அப்பாவி மக்களைக் கொல்லவில்லையா?போலியான என்கவுண்டர் போட்டு பல பேரை சுட்டுக் கொள்வது சட்டத்திற்கு உட்பட்டதா? பாகிஸ்தானில் எத்தனைபேர் கொல்லப்படுகின்றார்கள்?. போர்க் குற்றத்திற்காக தண்டனை கொடுத்தால் அனைவருக்கும்தான் கொடுக்க வேண்டும்.

இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஒரு தகுதியும் கிடையாது.  அணு ஆயுதம் உள்ளதென்று ஒரு நாட்டையே நாசம் செய்து விட்டார்கள். ஈராக்கில் அப்பாவிகளை கொன்று குவித்தார்களே? இவர்கள் தான் இலங்கைப் போர்க்குற்றத்திற்கு தண்டனை கொடுப்பவர்களா? பல கொலைகளைச்செய்த கொலைகாரன் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கு தண்டனை கொடுப்பது போன்று உள்ளது. இலங்கை அரசின் குற்றத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் இலங்கை அரசு செய்த போர்க்குற்றம் தூசிக்குத்தான் சம்மாகும். சரணடைந்த ஜப்பான் மக்களை குண்டு வீசி ஹிரோஷிமா, நாகஷாயி போன்ற இடத்தையே அழித்தனர். இதில் எத்தனை லட்சம் மக்களை கொன்றார்கள். இது இன்றளவும் அங்கு வாழும் அனைத்து மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதே.

கவுதமாலா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், குவாண்டமோ சிறையில் அமெரிக்கா செய்தது என்ன?

இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவிற்கு என்ன அருகதை உள்ளது என்று கேட்காமல் சிறிய கொடுங்கோலனுக்கு எதிராக இந்த பெரிய கொடுங்கோலன் அமெரிக்காவை இவர்கள் ஆதரிக்கின்றனர்.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்ன?

ராஜபக்சே போர்க்குற்றம் செய்ததற்காக அவரை தூக்கில் போடுவதற்காகவா இந்தத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்? கிடையவே கிடையாது. ராஜபக்சே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண கமிஷன் கொண்டுவருவதாக அறிவித்திருந்தார். அதனைக் கொண்டு வருவதற்காகத்தான் இந்த தீர்மானம்.

இதனால் ராஜபக்சேவுக்கு ஒரு எறும்பு கடித்ததற்கான வலி கூட கிடைக்கப் போவதில்லை. இவர்கள் தமிழ் மக்களையும், நாட்டையும் ஏமாற்றப் பார்க்கின்றார்களா? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தால் ராஜபக்சேவுக்கு எந்த சிக்களும் வரப்போவதில்லை. 

ஊரெல்லாம் ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ஆதரிக்காது. அதில் நியாயம் இருந்தால் மட்டும் தான் ஆதரவு கொடுக்கும்.

எமது இணையத்தின் குறிப்பு - 1, மேற்குறிப்பிட்ட இந்த அறிக்கையில் சில தவறுகள் உள்ளன. புத்தளம் மாவட்டம் கிழக்கு மாகாணத்தில் இல்லை. அது வடமேல் மாகாணத்தை சேர்ந்தது. 2, வடமாகாணத்தை சேர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் 2 மணித்தியாலத்தில் புலிகளின் பலாத்கார சுத்திகரிப்புக்கு  உட்டபட்டமையும் இங்கு கவனிக்கத்தக்கது.


26 comments:

  1. அதே போன்று காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகளும் சுப்ஹ் தொழுகையின் போது இடம்பெறவில்லை. இஷா தொழுகையின் போது இடம்பெற்றது.

    ReplyDelete
  2. mattu pj vituthalai pulikal konja muslimathanta kontanuvool aanal mahintha anaivarayum kolluvanta.
    tamil oravu yenpathu yenkalthu thoppulkoti oravuta. nee ippa pesum karuthinal indyavil muslim tamil inappirajjanai varum. seri unakku yeppati srilanka tamilarkalin nilai theriyum,?

    ReplyDelete
  3. sorry anwer brother,
    nan pj eanpavarai aatharippavanalla ungal karuthilum oru pakka niyayam irukkalam, anaal pj solluvathil pala unmaikal ullana tamilarukkaha kural koduppathu veru pulihalukkaha pantham pidippathu veru. neengal tamilarukkaha kural kodukkappoi tamil nattil maraikkappattirukkum LTTE yin muslimkalu eathirana kodumaikalai niyayappaduthida wendam.
    tamil nattil 1% tamilanukkum theriyadu LTTE eamakku ilaitha kodumaikal patri.

    ReplyDelete
  4. நல்ல ஆக்ரோசமான கருத்து சகோதரர் pj யின் கருத்து.... உண்மையை உறக்கச்சொல்வதில் யாருக்கும் பயப்படத்தேவையில்லை.

    ReplyDelete
  5. ஞானமில்லாமல் பேசவே கூடாது என்பது இதட்குதான் காத்தான்குடி மஸ்ஜிதுகளில் படுகொலை இரவு இஷா தொழுகையின் போது இறுதி ரக்காஅத்தின் முதல் ஸுஜுதில் இமாமும் மஃமூம்களும் இருந்த வேலை மின்சாரம் இல்லாத ஒரு இரவில் 1991 ஓகஸ்ட் 3 வெள்ளிகிழமையின் கடைச்சி அதாவது சனி பின்னேரம் வெள்ளி இரவு நேரத்தில் தொப்பி சாரம் வெள்ளை சேட் அணிந்து முஸ்லிம்கள் போல் வேடமிட்டு சந்தேகமின்றி இலகுவாக ஊடுருவி உள் நுளைந்த புலி பாஸிச காட்டு மிராண்டிகளால் நடத்தபட்டது இது எவ்வளவு பெரிய விசயமாக ஒரு முஸ்லிமுக்கு அதுவும் தமிழ் மொழியை பேசகூடிய முஸ்லிமை பொறுத்தவரை இருந்தும் விளக்கம் கொடுக்கிறேன் போர்வழி என்று ஸுபஹ் தொழுகையில் கொள்ளபட்டதாக என்னமா பீலா விடுகிறார் இந்த பீஜே இவர் இப்படித்தான் எல்லாதிலும் அரை குறை ஞானத்துடன் பேசுவாரோ??? மேலும் புலிகள் வெள்ளி கிழமை இஷா தொழுகையை தேர்ந்தெடுத்ததிட்கும் அதுவும் மீரா ஜும்மா பள்ளியையும் ஹுசைனியா பள்ளியையும் தேர்ந்தெடுத்ததிட்கும் கூட விஷேட காரணம் உண்டு அதாவது மீராஜும்ஃஆ பள்ளி அபோது தப்லிக் மர்கஸாக இயங்கி கொண்டிருந்தது ஜுமைராத் பயான் அங்கேதான் நடக்கும் அதட்கு ஆயிரகணக்கான மக்கள் ஒன்றுகூடுவார்கள் ஆக வெள்ளி கிழமை இஷா தொழுகையில் படுகொலையில் ஈடுபட்டால் அதிகமானோரை வேட்டை யாடலாம் என்பதே புலிகளின் திட்டம் ஆனால் முஸ்லிம்கள் ஏனையோர் வியாழன் இரவு என்பதையே வெள்ளி இரவு என்று சொல்லுவதும் ஏனையோர் வெள்ளி இரவு என்று சொல்லுவதை சனி இரவு என்று கருதுவதும் புலிகளுக்கும் தெறியாமல் போனதால் 103 உயிர் பழிகளுடன் புலிகளின் பாஸிசம் அங்கே முடிவடைந்தது அது மட்டும் ஜுமைராத் நடக்கும் வெள்ளி இரவில் நடந்திருந்தால் மரணித்தோறின் எண்ணிக்கை 1,000 மேல் இருந்திருக்கும் ஆக இதையெல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் எனில் ஸ்ரீலங்கா முஸ்லிம்களுக்கு புலி பாசிசம் செய்த கொடுமைகளை சுட்டி காட்டும் முக்கிய நிகழ்வாக இருக்கும் இந்த விடயங்கள் தெளிவான விபரங்களுடன் அந்த விஷயத்தை எத்தி வைக்கும் முஸ்லிம்களால் எத்தி வைக்கபட வேண்டும் என்பதட்காகவே அப்போதுதான் சந்ததி சந்ததிகளாக உண்மை உண்மையாக தெளிவான புள்ளி விபரங்களுடன் கடத்தபடும்

    ReplyDelete
  6. அட சகோதரரே நீர் அறியாமல் பேசுகிறாய்...!
    PJ சொன்னதில் என்ன தப்பு இருக்கிறது.
    இவர்களால் மகிந்தவை ஒன்றும் பண்ண முடியாது...!
    மிஞ்சி மிஞ்சிப்போனால், SL எதிராக பொருளாதாரத்தடை விதிர்ப்பார்கள்...!
    வேறு ஒன்றுமே அவர்களால் செய்ய முடியாது...! அதுதான் நிதர்சனம்...!
    அப்போது பாதிக்கபடுவது யார் ????????
    மகிந்தவா ?????

    இல்லை இலங்கை ஒட்டுமொத்த மக்களா ????

    கடைசியில் தண்டிக்கபடுவது நாட்டு மக்கள்தான் ....!

    மஹிந்தவல்லை ....!, நாட்டு மக்கள்தான் சகொதறேரே ....!

    சிந்தித்தால் புரியும்..!

    ReplyDelete
  7. Even PJ is from Tamil Nadu, his statement is correct, if people think, they will understand the fact.

    ReplyDelete
  8. இலங்கைக் கெதிராக பீ.ஜே.அவர்கள் களம் இரங்காததற்கான காரணத்தை
    விளக்்கம் இவ்வறிக்கை பாராட்டுக்குறியது.தான் வாழும் தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள்,தமிழ் மக்கள்,ஒரு போர் குற்றவாளிக்கெதிராக களம் கானும் போது,இன்னுமொரு குற்றவாளி நிரபராதி என காட்டப்படுகிறார்.இந்
    த எதிர்விணை பாதிக்கப் பட்ட முஸ்லிம்களை கவலை கொள்ள வைக்கும்
    என அவர் கருதுகிறார்.பெரும்பாண்மை சிந்தணை எல்லா சந்தர்ப்பத்திலும்
    நியாயத்தை பிரதிபளிக்க மாட்டாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.

    ReplyDelete
  9. இலங்கையில் 45000 முஸ்லிம்களே வாழ்கிறார்கள் என்றுஅறிக்கை விட்ட
    இந்திய முஸ்லிம் லீக் தலைவர்கே.எம். காதர் மொகிதீன் அவர்களும்,இலங்
    கை முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகளால் இழைக்கப் பட்ட கொடுமைகள்
    பற்றி இந்திய முஸ்லிம்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று அறிக்கை விட்ட
    கவிக்கோ அப்துல் ரஹூமான் அவர்களுடன் ஒப்பிடும் போது பீ.ஜே. அவர்களின் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய அறிவு பாராட்டுக்குறியது.போர்
    குற்றவாளிகள் பற்றிய நிலைப்பாடும் அற்புதமானது.

    ReplyDelete
  10. ARUMAIYAANA ARIKKAI IDAMPAYARVIL
    PAATHIKKAPPADDA UYIR ILANTHA MAKKALUKKUTHAAN DERIYUM ATHAN
    VALI SAGO. PJ AVARKALUKKU YAALMUSLIMKAL SAARFIL NANRIYAI DERIVITTHUK KOLKIREN.

    ReplyDelete
  11. pj averhalathu theermanem sariyanathu. note;anwar niyas averhal comment pannum pothu naam muslims & naavei pena veavdum .kanda maari easuvethu muminukku alahalla.allavukku payanthu kollungal.................

    ReplyDelete
  12. அன்வர் நியாஸ் ?பேசுறத பார்த்து வாசிச்சு பேசுங்க இந்தியாவிலுள்ள இந்து முஸ்லிம் கலவரம் வருவதற்க்காக வேண்டி உண்மையை பேசாமல் இருக்க முடியுமா பலிகள் அப்பாவி மக்களை கொள்ளவில்லையா?பிஜேயோடு கொபம் என்றால் வாய்க்கு வந்த படி பேசுவீங்களா இந்த கருத்தை உங்களுடைய குடும்பத்தில் உள்ள ஒருவர் பேசி இருந்தால் இப்படி எழுதுவீர்களா?

    ReplyDelete
  13. Even he is from Tamil Nadu, his statement of 100% correct, if people think they will understand the fact.

    ReplyDelete
  14. @anwar niyas
    உங்கள் விமர்சனப் பாணியைப் பார்த்தால் நாகரிகம் தெரிந்த ஒரு முஸ்லிமாகத் தெரியவில்லை. இலங்கை விடயமாக அந்த இந்திய அறிஞர் தெரிந்து வைத்துள்ள (மூன்று விடயங்களில் தவறு விட்டாலும்) அளவு கூட உங்களுக்கு தெரியவில்லை. இங்கு "LTTE யினர் கொஞ்ச முஸ்லிம்களைக் கொன்றதாக" நீங்கள் சொல்வதிலிருந்தே உங்களது சமூகம் பற்றிய அறிவு தெளிவாகத் தெரிகிறது. அந்த வாழ்வை சுவாசித்தவர்கள் நாங்கள். அது சரி, அவர் ஏன் ஸ்ரீ லங்கா தமிழர்கள் பற்றி தெரிய வேண்டும்? அவர் பேசியது முஸ்லிம்கள் பிரச்சினை பற்றி! உங்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் பற்றிய அறிவே சூனியம். அப்படியிருக்க இந்திய தமிழ் - முஸ்லிம் உறவு பற்றி comment வேறு. இந்திய நிலவரம் சரியாகத் தெரிந்த எவரும் உங்கள் கருத்தைக் கேட்டால் நகைப்பார்கள். ஒரு முறை இந்த உரையை மறுபடியும் படியுங்கள். இன்னுமொரு கேள்வி, இந்த profile போட்டோ எங்கு இருந்து பொறுக்கினீர்கள்???!!! சமூகத்தில் உள்ள புல்லுருவிகலையே துல்லினமா கோடிட்டுக் காட்டுவோம். நீங்க எம்மாத்திரம்!!! நாங்கள் இலங்கைச் சோனகர்கள். எங்களுக்கு பூர்வீகம் உண்டு எல்லோரையும் தாண்டிய வரலாறு உண்டு!

    ReplyDelete
  15. சத்திய வாதிகள் கூட்டத்தோட கோவிந்ததா போட மாட்டோம்.. .
    உண்மை இருந்தால் அதக்காக போராடுவோம் பொய் எண்டால் 1000 பேர் சொன்னாலும் நிதானம் இழக்க மாட்டோம் ((இதிலாவது வீண் விமர்சனம் செய்வோருக்கு புத்தி வரட்டும்))))

    ReplyDelete
  16. he is from India not from Sri Lanka, all story are right some are leave the comment without sense, he absolutely right?

    ReplyDelete
  17. Even though he is from our neighboring country, He has a wast knowledge of Sri Lankan Muslims rather than any other foreigners.Do not find faults on his petty mistakes(Like the geographical location of Puttalam, And the time of Kattankudy Massacre)Look at the content of the article. Do you (Critics) still think any one (I Mean a foreign Nationality) in the world having more knowledge than this Gentle man regarding the Sri Lankan Muslim still existing? If yes let him speak. I will offer them $ 5000( Australian Dollers)

    ReplyDelete
  18. சகோதரர் பீ.ஜே. சொன்ன கருத்தில் ஒரு சில திருத்தம் இருந்தாலும் சொல்லவேண்டிய முக்கியமான விடயம் பீ.ஜே அவர்களுக்கு நன்றி சொல்வதை விட்டு விட்டு விடுபட்ட சிறிய சிறிய விடயங்களையெல்லாம் பெரிதாக்கி விமர்சனம் சகோதரர்களே நிதானம் வேண்டும். பீ.ஜே. அவர்களுக்கு இதில் இனிவரும் காலங்களில் ஏறாவூர் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி பச்சிளம் பாலகர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள், இளைஞர்கள் என 121 முஸ்லிம்களை நடு இரவில் கொன்று குவித்தார்கள். இந்த பாசிச புலிகள் அதனையும் சேர்த்தால் நன்றாக இருக்கும். இன்ஸா அல்லாஹ். இந்தக் கொலையின்போது கர்ப்பினியின் வயிறை வெட்டி வயிற்றில் இருந்த கருவை வெளியில் எடுத்து அதற்கும் அம்மிக்குளவி யை வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறானவர்கள். 12 வயது பிரபாகரனின் மகனைக் கொன்றதாகக் கூறி அதனை ஐநா வில் பேசப்போகின்றார்களாம். மனிதநேயம் இல்லாத நாய்கள் இந்த புலிகள்.

    ReplyDelete
  19. @YAHYA MOHAMED
    உங்கள் பின்னூட்டல் வழமையில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் PJ உடன் உள்ள உங்கள் அதீத கோபம் உங்களை நிதானமிழக்கச் செய்துவிட்டதாய் தெரிகிறது. உங்கள் விமர்சப் பாணி அதில் நீங்கள் வைத்துள்ள தகவல்களை தரமிழக்கச் செய்கிறது. "ஜுமைராத் பயான்" பற்றிய உங்கள் ஆய்வு எனக்கு சரியாகப் படவில்லை. கொலை காரக் கும்பல், அதற்கு தலைமை செய்ய வந்தவன் இவர்களெல்லாம் காத்தான் குடி பற்றி தெரியாதவர்கள் அல்ல. சனி இரவு, வெள்ளி இரவு எல்லாம் அவர்களுக்கு தெரியும். அங்கேயே உண்டு அங்கேயே புரண்டு செஞ்சோற்றுக் கடனாக செய்த வினை தான் இது. காத்தான்குடி சம்பவம் தெரிந்த யாரும் இதை அறிவர். அதற்காக உங்கள் ஆய்வை நான் மட்டம் தட்ட வரவில்லை. ஆய்வை மதிக்கிறேன். ஆனால் அதன் அடிப்படையில் தவறு உள்ளது.
    அவர் ஒரு இந்தியராக இருந்து கொண்டு அங்குள்ளவர்களில் நம் பிரச்சினை பற்றி ஓரளவுக்காவது தெரிந்தவர். அவர்களது அமைப்பின் நிலைப்பாடுதான் தலைப்பே! இப்படி பல விடயங்கள் இருந்தும் உங்கள் கோபம் உங்கள் புத்தியை மறைத்துவிட்டது. நீங்கள் கொள்கைப் பிரச்சினையையும் சமூகப் பிரச்சினையையும் குழப்பிக் கொண்டதன் விளைவு. செய்தியை நன்றாக வாசியுங்கள். அதன் பிறகு உங்களுக்கு தெரிந்த விடயங்களை சொல்லிக் கொடுத்து ஒருவரை இந்தியாவுக்கு அனுப்புங்கள் உங்கள் கருத்தை சொல்ல!!

    ReplyDelete
  20. Brother Anwar Niyas, dont have any knowlage about Sri Lanka Muslim, and He dont know about Islam too. Even PJ from India, he know about our Muslims problem here.

    Brother Anwar Niyas has some personal problem with PJ. becouse of that even he says TRUE he try to find mistakes " ALLAH PODUMANAWAN"

    ReplyDelete
  21. neenga kalam irangithan naatula pirachina, so please innoru pirachina wenam...

    ReplyDelete
  22. I am not belong thowheed jamath but his main points LTTE were big enemmy for muslims he menthioned.

    ReplyDelete
  23. இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.[1] மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது.[2] கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவேயாம்.

    ReplyDelete
  24. @Saneej Sharifdeen உங்களுக்கு பீஜே மேல் உள்ள குப்பு உண்மையை ஒத்துகொள்ள புங்கள் புத்தியை விடாமல் மந்தமாக்கி வைத்திருக்கிறது பீஜே என்பவர் சாதாரணமானவர் அல்ல பெரிய ஆய்வாளராக தன்னை இனம் காட்டி கொன்டவர் இன்றைக்கு 1,400 வருடங்கள் முன்னர் வாழ்ந்த மக்கள் குறிதெல்லாம் இதுவரை மரணித்த இமாம்கள் செய்த ஆவ்வையெல்லாம் பொய்யாக்கி ஸஹீஹை ழயீபாகவும் ழயீபை ஸஹீஹாஹவும் மக்களுக்கு தன் ஆய்வுகள் மூலம் எடுத்துவைத்த மிக பெரிய மேதையாக தன்னை இனம் காட்டி கொண்டவர்

    அப்படி பட்டவர் இன்றைக்கி ஒரு இருப்பத்தி இரண்டு வருடங்களின் முனே அதுவும் தன் இருப்பிடதிட்கு வெறும் 300 400 கிலோமீட்டர் நேரடி தூரதிட்கு அப்பால் நடந்த ஒரு மிக பெரிய விஷயம் குறித்தே விபரத்தை உரியவாறு தெறியால் ஏதோ எல்லாம் தெறிந்த்துபோல் விட்டிருக்கும் பீலாவை வாசிக்கும் மனிதர்கள் என்ன நினைபார்கள் இந்த ஆய்வாளர் ஒரு விடயத்தை பற்றி கதைகையில் தெளிவாக ஆராய்ந்து விட்டு கதைக்காமல் மேலும் தனக்கு அது தெளிவாக தெறிந்து இருக்க வில்லை என்று கூறிவிட்டாவது கதைகாமல்

    எல்லாம் தெறிந்ததுபோல் கதைத்திருப்பது ஏட்புடையதா புத்தளம் கிழக்கு மாகாணத்திலாம் யாழ் முஸ்லிம்களை விரட்டி விட்டு கிழக்கில் ஊடுறுவி காத்தான்குடியில் அதிகாலையில் புகுந்து ஸுபஹ் தொழுதுகொண்டிருந்தோரை சுட்டு கொலை செய்தனராம் இப்படி இவர் சொல்லி இருப்பது சாதாரண தவறா??? இப்படி 22 வருஷதுகுள் நடந்த விஷயம் குறித்தே இவ்வளவு மட்டரகமான அறிவை கொண்டிருப்பவர் எப்படி 1,400 வருடகால குர்ஃஆன் ஹதீதுகளின் வரலாறுகளை அறிந்து தெளிவாக மிக சரியாக மொழி பெயர்த்து இருப்பார் என்ற ஐயம் எழுவது நியாயம் அல்லவா ஒரு பானைக்கி இரு சோறுபதம் என்பதுபோல் இவரது இந்த பேச்சு இன்றைய வீரகேசரி இணையதிலும் வந்திருக்கிறது இதனை படிக்கும் மக்கள் இவரது இந்த சுட்டிகாட்டலை எப்படி எள்ளி நகையாடுவர்???இவரது மடத்தனமான தெளிவற்ற நிலையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் குறித்த பேச்சு நாளை யாரையும் உண்மையான விஷயங்களை இவர் சொன்னாலும் நம்ப வைக்காதல்லவா???

    நீங்கள் பொய் பச்சை பொய் சொல்கிறீர்கள் அந்நியமக்கள் யாறுக்குமே நாம் வெள்ளி இரவு என்று கூறும் வியாழனின் 18 மணித்தயாளத்தில் இருந்து 2359 மணித்தயாளம் வரையான காலபகுதி வெள்ளி இரவு என்று யாறுக்கும் தெறியாது மேலும் எவன் என்னை படைத்தானோ அவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன் புலிகள் கொலை செய்ய தீர்மானித்த நாள் ஜுமைராத் நடக்க கூடிய வெள்ளி இரவே ஆனால் அவர்களின் பார்வையில் வெள்ளிகிழமையின் 18ஆவது மணித்தயாளத்தில் இருந்து ஆரம்பமாகும் இரவு பகுதியே வெள்ளி இரவு என்று கருதபடுவதாலேயே அவர்களால் ஜுமைராத் இரவில் பாஸிஸ வேட்டை யாட முடியவில்லை இந்த உண்மையை நீங்கள் மறுப்பதால் அது பொய்யாகி விடாது காத்தான்குடிக்கு வந்து அந்த மஸ்ஜிதில் அந்த நேரம் தொழுவித்த இமாம் முதல் இதனுடன் சம்மந்தபட்ட யாரை கேட்டாலும் உங்களுக்கு விளாவாறியாக விளக்கம் சொல்லுவார்கள் ஆக தெளிவில்லாத அறிவை கொண்டு ஏன் ஒருத்தருக்காக மடத்தனமான வக்காலத்து???காதான்குடி மக்களோடு பழகிய புலிகளே கொலை செய்தார்கள் என்று சொல்லி காதான்குடி மக்கள்மேல் அபாண்டத்தை சுமத்தாதீர்கள் இந்திய இராணுவம் வெளியேறியதுமே காதான்குடி மண்ணைவிட்டும் புலிகள் முற்றாக விரட்டபட்டு விட்டனர் இந்த விடயம் நடைபெறுகையில் அங்கே புலிகளின் ஜென்ம விரோதிகளாகதான் அணைவரும் வாழ்ந்துகொண்டிருந்தனர்

    ReplyDelete
  25. ஒரு விடயத்தை யதார்த்தமாகப் பேசுவதே நல்லது. எது எப்படிப்போனாலும் பீ.ஜே அவர்களின் துணிச்சலான அறிக்கை பாராட்டப்படவேண்டியது.அல்லாஹ அவர்மீது அருள்புரிவானாக மனிதன் என்றவகையில் சில தரவுகள் தவறானது. நம்ம நாட்டில் உள்ளவர்களுக்கே ஒழுங்காத்தெரியாத விஷயம் பி.ஜே தெரிந்துவைத்திருப்பது ஆச்சரியமே

    ReplyDelete
  26. @ yahya mohammed

    நாடு நிலையான மனதோடு உங்கள் பின்னூட்டலை மீண்டும் படியுங்கள். உங்கள் நிதானமின்மை உங்களுக்கு தெரிய வரும். சகோதரர் PJ கருத்துக்கள் "சில"வற்றில் எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தும் அவர் மீது சுமத்தப்பட்ட தப்பான விமர்சனத்தை நான் ஏற்கவில்லை.
    இஸ்லாமிய வரலாறையும், நபிகளாரின் செய்தியையும் குழப்பிக்கொண்டு சோறு, பதம் என்கிறீர்கள். ஹுப்பு, காழ்ப்புணர்வு என்பது உங்களதும், எனதும் பின்னூட்டல்களை நடுநிலையாய் வாசிப்பவர்களுக்கு புரியும். உங்கள் அதீத கோபம் நான் சொல்ல வருவதை உங்களுக்கு விளங்க விடுவதாய் தெரியவில்லை.
    நானும் காத்தான்குடிக்கு அண்மையில் வசித்தவன் தான். சம்பவம் நடக்கும் பொது சிறுவனாக இருந்தாலும், விடயங்களை புரிந்து கொள்ளும் வயதில் தான் இருந்தேன். நான் காத்தான்குடி மக்கள் மேல் அபாண்டம் சுமத்தியதாய் ஒரு சங்கதி சொன்னீர்கள். எனது பின்னூட்டலை சரியாகப் படிக்காமல் விமர்சிக்கும் அவசரம் உங்கள் புத்தியை மறைத்திருக்கக் கூடும். தாக்குதலுக்கு தலைமை தாங்கியவன் ஒரு அரிசி ஆலையில் வேலை செய்தவன். அதன் உரிமையாளர் அவனை அவர் சொந்த மகன் போல பார்த்தவர்... இப்படி சம்பவம் நீளும். நான் உங்களைப் போல அல்ல பின்னணியுடனே எனது வாதத்தை வைத்தேன். அதில் தவறு இருந்தால் நாகரிகமாக சொல்லுங்கள். தவறு இருந்தால் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு ஹுப்பு இருக்குதோ இல்லையோ உங்களுக்கு அடக்க முடியா கோபம் இருப்பது உங்களின் நிதானமற்ற சொற் பிரயோகங்களும், அரைகுறையாய் வாசிக்கும் போக்கும் பின்னூட்டலில் பிரதிபலிக்கிறது. ஏனென்றால் மற்ற விடயங்களில் மிக நிதானமாய் பேசும் நீங்கள் PJ மற்றும் தௌஹீத் என்றால் நிதானமிழப்பதாய் தெரிகிறது. சரி PJகுத் தான் ஆய்வு செய்யத் தெரியவில்லை. உங்கள் ஆய்வுக்கு தெரியவில்லையா "நாகரிகமாய், நிதானமாய் விமர்சிப்பதைத்" தான் அல்லாஹ்வின் தூதர் ஆதரித்தார்கள் என்று?!

    ReplyDelete

Powered by Blogger.