இங்கிலாந்தில் கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார்
(மாலை மலர்) இங்கிலாந்தில் உள்ள ஓட்டல்களில் மாட்டு இறைச்சி என ஏமாற்றி குதிரைக்கறி சப்ளை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழல் முறைகேடு தொடர்பாக பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், அங்கு மாட்டு இறைச்சி என்ற பெயரில் கழுதை இறைச்சி விற்பனை செய்யதாக பிரான்சை சேர்ந்த மந்திரி புதிய புகாரை தெரிவித்துள்ளார்.
இதற்கு இங்கிலாந்து சுற்று சூழல் மந்திரியும், ஐரோப்பிய பாராளுமன்ற விவசாய குழுவின் துணை தலைவருமான ஜோஸ் போவ் ஆகியோர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த அவர்கள் ருமேனியாவில் கழுதை மற்றும் குதிரைகளை சரக்குகள் சுமக்க வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அது கடந்த 6 ஆண்டுகளாக அமலில் உள்ளது.
எனவே, லட்சக்கணக்கான கழுதைகளும், குதிரைகளும் அறுவை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறைச்சி ஆக்கப்பட்டு மறைமுகமாக விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
Post a Comment