Header Ads



ஆப்கானிஸ்தான் மக்களை மதிக்கிறதாம் அமெரிக்கா

ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமித் கர்சாயின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கப் படைகள், அவர்களுக்காக வேலைபார்க்கும் ஆப்கானியர்களை சித்திரவதை செய்து கொலை செய்வதாக குற்றம்சாட்டியிருந்தார்.  

அமெரிக்காவின் சிறப்புப் படைகள் ஆப்கானிஸ்தானின் 'வார்டக்' பகுதியிலிருந்து 2 வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என்றும்  ஆப்கானிஸ்தான் அரசு உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி நேற்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: 

நாங்கள் ஆப்கானிஸ்தான் மக்களை மதிக்கிறோம். அவர்கள் வெளிபடுத்தியிருக்கும் கவலைகளை புரிந்து கொள்கிறேன். அவர்களின் புகார்கள் குறித்து  விசாரிப்போம் என்று உறுதி கூறுகிறேன். இதுகுறித்து நேட்டோவின் தலைமையில் செயல்படும் சர்வதேச பாதுகாப்பு உதவிப்படைதான் முடிவு செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.